மாஸ் நடிகர் மகன் இவ்ளோ மக்கா?.. பல மாசம் ஆகியும் கதையே ரெடியாகல.. கடுப்பில் தயாரிப்பு நிறுவனம்?

By Staff

சென்னை: தந்தையின் தயவே இல்லாமல் சினிமாவில் பெருசா சாதிக்கப் போகிறேன் என களமிறங்கி உள்ள மாஸ் நடிகரின் மகனுக்காக நிறைய செலவு செய்து ஆபிஸ் எல்லாம் போட்டுக் கொடுத்தும் சீரியஸாக கதையை ரெடி பண்ணாமல் நண்பர்களுடனும் தோழிகளுடனும் நடிகரின் வாரிசு ஜாலி செய்துக் கொண்டிருப்பதாகவும் அதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் செம கடுப்பில் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ் நடிகரின் மகன் வெளிநாட்டில் படித்து விட்டு கோலிவுட்டில் படம் எடுக்கப் போவதாக முடிவு செய்த நிலையில், அவரது அம்மா பெரிய நிறுவனத்தில் அணுகி அறிமுகப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் தனி ஆளாக செய்து மகன் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்.

Popular actor son struggles to make a good script for his debut movie?

ஆனால், பல மாதங்கள் ஆகியும் இன்னமும் கதையையே அந்த வாரிசு ரெடி பண்ணவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனம் அப்செட் ஆகி விட்டதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே நஷ்டம்: அந்த பெரிய தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து பல இயக்குநர்களும், நடிகர்களும் ஏமாற்றி நல்ல படங்களை கொடுக்கிறோம் என பாம்பு பட்டாஸ் படங்களாக கொடுத்து காசை எல்லாம் கரியாக்கி பெரியளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பிரம்மாண்டத்தின் இயக்கத்தில் பாஸ் நடிகர் நடித்துள்ள படத்தை பெரிதளவில் நம்பிக் கொண்டிருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு சமீபத்தில் அந்த படத்தின் மீதான ஹைப் முற்றிலும் குறைந்து விட்ட நிலையில், கடுப்பில் உள்ளதாம்.

ஆபிஸுக்கே வருவதில்லை: இந்நிலையில், போனா போகட்டும் என மாஸ் நடிகரின் மகனுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி பெரிய ஆபிஸ் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி தந்த நிலையில், ஆபிஸுக்கு வந்தே சில வாரங்கள் ஆகிறது என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பவுண்டட் ஸ்க்ரிப்ட் பணிகளையும் முடிக்காமல் தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே காலத்தை விரயமாக்கி வருகிறாராம் வாரிசு என்கிற விஷயத்தை உள்ளூரில் இருப்பவர்கள் வெளிநாட்டில் உள்ள ஓனர் காதுக்கே தெரிவித்த நிலையில், அவர் கடுப்பாகி விட்டாராம்.

வார்னிங்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் கதையை முழுமையாக ரெடி செய்து விட்டு படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வேறு தயாரிப்பு நிறுவனத்தை தேடி செல்ல வேண்டிய நிலை வரும் என்றே தயாரிப்பு தரப்பு தற்போது வாரிசுக்கு வார்னிங் கொடுத்து விட்டதாக கூறுகின்றனர். ஒரு குறும்படத்தைக் கூட சரியாக இயக்காத அவருக்கு முழு கதை ரெடி பண்ண சொன்னதும் சரியாக முடிக்க முடியாமல் தவித்து வருவது தான் தாமதத்திற்கு காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X