தர்ம சங்கடமான சூழல்.. மகனுக்கு ஒரே மனக்கஷ்டமா போச்சாம்.. அப்பா செயலால் வெளியே தலைகாட்ட முடியாத நிலை?

By Staff

சென்னை: அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு அப்பா போடும் ஆட்டத்தை பார்த்து மகனுக்குத்தான் ரொம்பவே மனக்கஷ்டமாக போய்விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. சிறு வயது முதல் சூப்பர் ஹீரோவாக ரசித்த அப்பா இப்போ இருக்குற நிலைமையில அவருடன் நிற்க முடியாத நிலைக்கு நம்மை தள்ளிவிட்டாரே என்றும் ரொம்பவே வேதனையடைந்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் மூலம் சில தகவல்கள் கசிந்துள்ளன.

பல வருடங்களாக நடிகர் ரகசியமாக அந்த நடிகையுடன் பழகி வந்ததை அறிந்தும் அறியாதது போல வாழ்ந்து வந்த மனைவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல அந்த இயக்குநரை வைத்து நடிகர் பார்த்து விட்ட வேலை தான் அனைத்து பிரச்னைகளும் மீண்டும் ஆரம்பிக்கவே காரணம் என்கின்றனர்.

Popular Actor Son upset over his Father s Wrong Turn
Photo Credit:

பல வருடங்களுக்கு முன்பே நடிகருடன் நடிகைக்கு நெருக்கம் ஏற்பட்டதை அறிந்துக் கொண்ட மனைவி இருவரையும் பெரிய சண்டை போட்டு பிரித்து விட்டார் என்கின்றனர்.

மீண்டும் சேர்ந்த ஜோடி: ஆனால், மனைவிக்கு தெரியாமல் அடிக்கடி நடிகையுடன் சுற்றிக் கொண்டிருந்த நடிகர் மீண்டும் இணைந்து நடித்த நிலையில், காதலிக்கவே முடிவு செய்து திருமணத்துக்கும் தயாராகி விட்டார் என்பது தான் மனைவிக்கு பெரிய ஷாக்காக மாறியது என்கின்றனர். பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்ட நிலையில், இதற்கு மேலும், அசிங்கத்தை மூடி மறைக்க முடியாது என்றும் சகித்துக் கொண்டு வாழ முடியாது என நினைத்த மனைவி கணவரை விட்டு விலகிச் சென்று விட்டார் என்கின்றனர்.

மகனுக்குத்தான் தர்ம சங்கடம்: வெளிநாட்டில் ஜாலியாக வாழ்ந்துக் கொண்டிருந்தால் கூட மனதளவில் மட்டுமே மகனுக்கு கஷ்டம் வந்திருக்கும். ஆனால், இப்போ தர்ம சங்கடமான சூழலுக்கு நடிகர் மகன் சிக்கித் தவித்து வருகிறார் என்கின்றனர். அதற்கு காரணம், அவரும் தந்தையின் துறையை தேர்வு செய்தது தான் என்றும் விரைவில் நடைபெறவுள்ள அவருக்கான புதிய வாழ்க்கைக்கு அப்பாவின் மேட்டர் ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார் என்கின்றனர்.

அனைத்தையும் சகித்துக் கொண்டு: எவ்வளவு தான் பிரச்னை வந்தாலும், எப்படியாவது வெற்றிப் பெற்று தான் யார் என்பதை நிரூபிப்பதற்காக மகன் அனைத்தையும் சகித்துக் கொண்டு போராடி வருகிறார் என்கின்றனர். கூடிய சீக்கிரமே வெளியே தலைகாட்ட உள்ள மகன் பல விஷயங்களை ரிவீல் செய்யவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X