தேனீக்கள் கொட்ட தேன் எடுத்தது நானு.. நக்கித் திங்கிறது மட்டும் மத்தவங்களா.. குமுறிய வாரிசு நடிகர்?
சென்னை: அப்பாவே இந்த வயதில் அசால்ட்டு காட்டுகிறார். அந்த இயக்குநர் இல்லாமல் என்னால் அடுத்த ஹிட் கொடுக்கவே முடியவில்லையே என வாரிசு நடிகர் புலம்பித் தள்ளிவிட்டாராம். எப்படியாவது ஒரு முரட்டு ஹிட் கொடுக்க வேண்டும் என பல வருடங்கள் கடுமையாக உழைத்த நிலையில், டிரெண்டாவது மட்டும் அந்த வாரிசு நடிகையா என்று கத்திவிட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சில பேருக்கு டிசைன் அப்படித்தான் உள்ளது என நடிகரின் நெருங்கிய ஆலோசகரே கூறிய நிலையில், இந்த விவகாரத்தை யாரு ஊதி பெரிதாக்குனாங்க எனக்கு கிடைக்க வேண்டிய பேரும் புகழும் அப்படியே டைவர்ட் ஆக என்ன காரணம் என கண்டுபிடிக்க மேனேஜரிடம் உத்தரவு போட்டுள்ளாராம்.

மேலும், நடிகரின் பாதுகாவலர் முதல் மனைவி வரை வைரலாகின்றனர் என்றும் கஷ்டப்பட்ட நடிகரை மட்டும் யாருமே கண்டுக்கொள்ளவே இல்லாதது நடிகரை மனதளவில் பாதிப்படைய செய்துள்ளது எனக் கூறுகின்றனர்.
தேனீக்கள் கொட்ட தேன் எடுத்தது நானு: கடந்த 2 வருடங்களாக மற்ற எந்தவொரு படத்திலும் கவனம் செலுத்தாமல் கண்டிப்பாக இந்த கதை வெல்லும் என நினைத்து கடுமையான உடல் உழைப்பை போட்டு நடித்தும் அதி வேகமாக நடனமாடியும் நடிகர் உழைத்த உழைப்பெல்லாம் ரெண்டு சீனில் கிளாமர் காட்டிய நடிகை கொத்திக்கிட்டு போய்விட்டாரே என்றும் மொத்த படத்தையும் முடித்து விட்டாரே என்றும் நடிகர் அப்செட் ஆகிவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
எல்லாரும் டிரெண்ட் ஆகுறாங்க: நெகட்டிவாகவோ பாசிட்டிவாகவோ தன்னை விட படத்தில் பணியாற்றியவர்களும் தனக்கு பாதுகாப்பாக இருந்தவர்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகின்றனர். ஆனால், தான் மட்டும் ஏன் எந்தவொரு விதத்திலும் டிரெண்ட் ஆகவில்லை என்றும் அதற்கான அத்தனை உழைப்பையும் போட்ட பின்னரும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என நடிகர் புலம்பித் தள்ளிவிட்டார் என்கின்றனர்.
அந்த டைரக்டருக்கு போன்: மீண்டும் எப்போது இணைந்து பணியாற்றலாம் என அந்த பிரம்மாண்ட இயக்குநருக்கும் மன நிம்மதி இல்லாமல் போன் அடித்து விட்டார் நடிகர் என்றும் பக்கத்து ஸ்டேட்டில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. வாரிசு நடிகை பாக்கி சம்பளம் வந்ததும் விவகாரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார் என்றும் இதற்கு மேல் அந்த நடிகையை இந்த பக்கமே கொண்டு வராதீங்க என்றும் கத்தி விட்டார் நடிகர் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications