உச்ச நடிகருக்கு பதிலடி கொடுக்க பணத்தை வாரி இறைக்கும் மாஸ் நடிகர்.. விமர்சகர்களுக்கு செம ஜாக்பாட்!
சென்னை: போட்டி நடிகர் வேற ஒரு ரூட்டில் சைலன்ட் ஆகிவிட்ட நிலையில், நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மாஸ் நடிகருக்கு உச்ச நடிகர் கடும் போட்டியாக திடீரென களத்தில் குதித்து இருப்பது கவலையை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
ஓவர்சீஸில் நடிகருக்கு இருக்கும் பிசினஸை எப்படியாவது தன் பக்கம் ஈர்த்து விடலாம் என்கிற கனவுடன் இருந்து வந்த மாஸ் நடிகருக்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் உச்ச நடிகர் பெரிய மார்க்கெட்டையும் பிசினஸையும் பண்ணப் போகிறார் என்கிற தகவல்கள் தலைவலியை கொடுத்திருப்பதாக பேச்சுக்கள் திகிலை கிளப்பி உள்ளன.

இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பிருந்தே சில யூடியூப் விமர்சகர்களுக்கும், டிராக்கர்களுக்கும் லட்சக் கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகிறார் மாஸ் நடிகர் என்கிற ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்த மீடியா கன்ட்ரோலும்: உச்ச நடிகர் வசம் மொத்த மீடியா கன்ட்ரோலும் பல காலமாக இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளாகவே சோஷியல் மீடியா கன்ட்ரோல் முழுவதையும் தன் வசம் ஆக்கிக் கொண்டார் அந்த மாஸ் நடிகர்.
சோஷியல் மீடியாவில் வருவது எல்லாமே நெகட்டிவிட்டி என பேசி வந்தாலும், சமூக வலைதளத்தை ஆட்சி செய்வது என்னவோ அந்த மாஸ் நடிகர் தான்.
உச்ச நடிகரால் உறக்கம் போச்சு: டாப் நடிகர் போட்டி குறைந்து விட்ட நிலையில் தனது அடுத்த படத்தை இண்டஸ்ட்ரி ஹிட்டாக இந்த ஆண்டு கொடுத்து விடலாம் என பல கனவுகளுடன் இருந்து வந்த மாஸ் நடிகருக்கு சமீபத்திய ஓவர்சீஸ் ரிப்போர்ட்டுகள் தூக்கத்தை கெடுத்து இருப்பதாக கூறுகின்றனர்.

உச்ச நடிகரின் படத்திற்கு ஓபனிங்கே பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பது உறுதியானால் இந்த ஆண்டின் அதிக வசூல் படமாக அந்த படம் தான் மாறும் என்கிற நிலை இருப்பதாக பல டிராக்கர்களும் கணித்து கூறியுள்ளனர்.
யூடியூப் விமர்சகர்களுக்கு கொட்டும் பணம்: இந்நிலையில், யூடியூப் விமர்சகர்கள் மற்றும் ஆன்லைன் டிராக்கர்களை பயன்படுத்தி நெகட்டிவிட்டியை எந்தளவுக்கு பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பைசா என மாஸ் நடிகர் லட்சக் கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
சில யூடியூப் விமர்சகர்கள் பகல் இரவு பாராமல் உச்ச நடிகரை டார்கெட் செய்து திடீரென தாக்குவதற்கு பின்னால் இருப்பதே அந்த மாஸ் நடிகர் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











