இந்த பொழப்புக்கு.. ஒல்லி நடிகர் பார்க்கும் படுமோசமான வேலை.. புலம்பும் திறமையான இயக்குநர்கள்?

By Staff

சென்னை: ஒரு படம் ஹிட் அடித்தவுடனே அந்த இயக்குநரை நேரில் வரவழைத்து அடுத்து நம்ம படம் பண்ணுங்க என அந்த இயக்குநருக்கு ஆஃபர் கொடுப்பது போல ஆப்பு கொடுத்து வருகிறார் ஒல்லி நடிகர் என சினிமா வட்டாரத்தில் பகீர் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

ஒல்லி நடிகரை நம்பி பல திறமையான இயக்குநர்கள் அவருக்காக காத்திருந்து புதிய கதைகளை உருவாக்கி வந்து கொடுத்தால், அது சரியில்லை என்றும் இது சரியில்லை என்றும் சொல்லி ஒல்லி நடிகர் அந்த இயக்குநர்களை மனதளவில் காயப்படுத்தி அவர்களது நேரத்தையும் வீணடித்து வருகிறார் என சமீபத்தில் பிரபலம் ஒருவரிடம் பாதிக்கப்பட்ட இயக்குநர் புலம்பியது கோலிவுட்டில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

gossip kollywood actors gossip

இதுவரை அரை டஜன் இயக்குநர்களை ஒல்லி நடிகர் இப்படி வச்சு செய்துள்ளார் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. இதற்கு எல்லாம் ஒரு பெரிய காரணம் இருக்கிறது என்கிற அதிர்ச்சி பேச்சிகளும் கிளம்பியுள்ளன.

புலம்பிய இயக்குநர்: சைக்கொ படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அந்த இயக்குநரை மூளைச்சலவை செய்து தனது படத்தின் இயக்குநர் என சொல்லி பல வருடங்கள் அடுத்து அவரை படமே எடுக்க விடாத அளவுக்கு ஒல்லி நடிகர் ஆக்கிவிட்டார் என சமீபத்தில், ஒல்லி நடிகரிடம் சிக்கிய இன்னொரு இயக்குநர் புலம்பியுள்ளார் என்கின்றனர்.

சண்டை இயக்குநர்: கடவுள் பெயர் கொண்ட நடிகரின் சண்டை படத்தை இயக்கிய இயக்குநருக்கும் வாய்ப்புத் தருகிறேன். உங்களை போன்ற திறமையான இயக்குநரை பார்த்ததே கிடையாது என ஆபிஸ் போட்டுக் கொடுத்த ஒல்லி நடிகர் ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த இயக்குநரை வேற எங்கேயும் செல்ல விடாமல் கதையில் ஏகப்பட்ட கரெக்‌ஷன்களை சொல்லி அவரது மண்டையை காய வைத்து விட்டார் என்கின்றனர்.

அடுத்த பலியாடு: சமீபத்தில் வெளியான கிரிக்கெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநருக்கும் ஒல்லி நடிகர் மாலை போட்டு மஞ்சத் தண்ணி ஊத்த ரெடியாகிவிட்டார் என்கின்றனர். தம்பி நீயாவது இப்போதே பிழைத்துக் கொள் என்றே ஏற்கனவே பாதிக்கப்பட்ட இயக்குநர் ஒருவர் போன் மூலமாக அலர்ட் செய்துவிட்டார் என்றும் பேச்சுக்கள் கசிந்துள்ளன.

இதுதான் விஷயமா?: இசை பட இயக்குநரையும் தன் இஷ்டத்துக்கு காக்க வைத்து வரும் ஒல்லி நடிகர் இப்படியெல்லாம் செய்ய காரணமே நல்ல இயக்குநர்களை எல்லாம் நோகடித்து மனதளவில் அவர்களை காலி செய்து விட்டு அவர்களின் டெக்னிக் எல்லாம் வாங்கிக் கொண்டு தன்னை ஒரு சிறந்த இயக்குநராக்க வேண்டும் என்கிற முயற்சியில் தான் இப்படியான வேலைகளை பார்த்து வருகிறார் என்கின்றனர். எந்தவொரு இயக்குநரையும் தூக்கிவிடும் எண்ணமே அவருக்கு துளியும் கிடையாது என்றும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X