வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கப் போகும் ‘வி’ நடிகர்.. மாஸ் நடிகர் ரசிகர்கள் சும்மா வெறியாகிட்டாங்க!

By Staff

சென்னை: தொடர்ந்து சொதப்பல் படங்களை கொடுத்தால் முன்னணி நடிகர்கள் படங்களை பார்க்கவே தியேட்டர் பக்கம் ரசிகர்கள் வருவது அரிதாக மாறி ஃப்ளாப் போர்டு போட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், தேவையில்லாமல் மாஸ் நடிகரை சீண்டி வி நடிகர் பேசியது அவருக்கு பெரும் பேக் ஃபயர் ஆகும் என திடுக்கிட வைக்கின்றனர்.

தான் பேசியது தனக்கும் தனது புதிய படத்துக்கும் பாதிப்பை கொடுத்து விடுமோ என்கிற அச்சம் நடிகருக்கே வந்த நிலையில் தான் தொடர்ந்து அதற்கு விளக்கம் கொடுக்க முயன்றாலும், ரசிகர்களை சாந்தப்படுத்த அவர் நினைக்கவே இல்லை என்பதற்கு இன்னொரு பெரிய காரணம் உள்ளது என ஷாக் கொடுக்கின்றனர்.

Popular Actor sticks in a big controversy with Mass Director put him in a trouble

எந்த பின்புலத்தில் நடிகர் அப்படி பேசியுள்ளார் என்பதை அறிந்துக் கொண்ட மாஸ் நடிகரின் ரசிகர்கள் படத்துக்கு பெரிய சம்பவத்தை செய்து விட வேண்டியது தான் என கங்கணம் கட்டி விட்டனர் என பகீர் கிளப்புகின்றனர்.

ராட்சத தயாரிப்பு: மாஸ் நடிகருக்கு எதிராகவும் எதிரியாகவும் இருக்கும் அரசியல் கட்சியின் குடும்ப சொத்தான ராட்சத தயாரிப்பு தான் வி நடிகரின் படத்தை ரிலீஸ் செய்கிறது என்றும் அதன் காரணமாகவே அவர் இந்தளவுக்கு மாஸ் நடிகரை மட்டம் தட்டி பேசியுள்ளார் என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கிளப்ப ஆரம்பித்த புயல் கூடிய சீக்கிரமே வி நடிகருக்கு இன்னொரு இடியாக இறங்கும் என்கின்றனர்.

இந்த படமும் போச்சுன்னா: அழகா எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் ஹிட் அடிக்க வேண்டிய இந்த படமும் அவுட் ஆச்சுனா நடிகரின் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக மாறிவிடும் என்று கூறுகின்றனர். நடிகர் பார்த்த வேலை படக்குழுவுக்கே பிடிக்கவில்லை என்றும் சில பிரபலங்கள் நடிகரை அலர்ட் செய்த நிலையில், தான் தொடர்ந்து அதுதொடர்பாகவே பேசி வருகிறார் என்கின்றனர். ஆனாலும், சரண்டர் ஆகாமல் சண்டை செய்யும் தொனியில் நடிகர் பேசி வருவதால் கண்டிப்பாக அவரது புதிய படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என பீதி கிளப்புகின்றனர்.

தப்பு கிடையாது: நடிகர் தன் பக்கம் எந்த தப்பும் கிடையாது என்றும் என்ன ஆனாலும், பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்துடன் உள்ளார் என்றும் கூறுகின்றனர். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்க போகிறாரா? அல்லது வென்றுக் காட்டப்போறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X