புது பிசினஸால் தூக்கமில்லாமல் அலையும் நடிகர்.. நடிகை நச்சரிப்பும் தாங்க முடியலயாம்
சென்னை: இந்த நடிகருக்கு நல்லபடியாக மனைவி, குழந்தைகள் எல்லாம் இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என நடிகையே கதி என்று இருக்கிறார். நடிகை ஆசைப்பாட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யும் நடிகர், நடிகையின் ஆசைப்படி புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளார். அதில் நடிகை எதிர்பார்த்தது போல சக்சஸும் ஆகி நல்ல படியாக லாபம் பார்த்து வருகிறார்.
இதெல்லாம் இப்படி இருக்க, புது பிசினஸில் லாபம் கொட்டோ கொட்டு எனக் கொட்டுகிறது. இதனால் நடிகர் எப்படி மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு நம் பின்னாடி சுற்றுகிறாரோ, இப்போது பணம் கோடிகளில் கொட்டுவதால் நடிகர் திடீரென தன்னைக் கழட்டிவிட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை தனக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டா என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறாராம்.
இப்படி யோசித்த நடிகை, உடனே நடிகரை எப்போதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பக்காவான பிளான் ஒன்று போட்டுள்ளார். அதாவது ஜோசியர் ஒருவர் மூலம், இந்த நடிகை உங்களுடன் இருப்பதால் தான் உங்களது புது பிசினஸில் எதைத் தொட்டாலும் பொன்னாக மாறுகிறது. நடிகை இல்லை என்றால் நீங்கள் இருப்பதையும் இழந்து விட்டு வெறுமனேதான் இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகையே கதி: இதைக் கேட்டதில் இருந்து நடிகர் நடிகையே கதி என்று மேலும் கிடக்கிறாராம். நடிகர் கொண்டு வந்து கொட்டும் கோடிகளை நடிகை வெளிநாட்டில் உள்நாட்டில் தடை செய்யப்பட்ட சில உற்சாக பொருட்களை வாங்கி உல்லாச வாழ்கையில் கொடி கட்டிப் பறந்து வருகிறாராம். நடிகரும் நடிகை கோடிக்கணக்கில் செய்யும் செலவுகள் குறித்து எந்தவிதமான கேள்விகளும் கேட்காமல் அமைதியாக இருக்கிறாராம்.
தலைவலையில் நடிகர்: இது மட்டும் இல்லாமல், நடிகை அவ்வப்போது போதையில் நடிகரைப் போட்டு பாடாய்ப் படுத்துகிறாராம். மேலும், நடிகருக்கு நடிகையின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறரதாம். குறிப்பாக நடிகை போதையில் வெளியே சென்றால் பல ஏழரைகளை இழுத்து வருகிறாராம். இவற்றை எல்லாம் காதும் காதும் வைத்தது போல முடிக்கவே நடிகருக்கு நேரம் சரியாக இருக்கிறதாம். இதனால் நடிகர் நிம்மதியே இல்லாமல் அலைகிறாராம். இதனால் நடிப்பு, புது பிசினஸ் என எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது என நெருங்கிய வட்டத்தில் புலம்புகிறாராம்.


Click it and Unblock the Notifications