அம்மா வேண்டாம்.. அக்காவை கூட்டிட்டு வா.. நடிகையை டார்ச்சர் பண்ண ஹீரோ.. எல்லாம் அதுக்குத்தானா?

By Staff

சென்னை: சினிமா வாய்ப்புக்காக இளம் நடிகை கடுமையாக போராடி கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் செல்லும் போது தனது அம்மாவை கூடவே அழைத்துச் சென்று வருகிறார் அந்த நடிகை. மகளின் பாதுகாப்புக்காக உடைகள் முதல் ரூம் அறை வரை அனைத்தையும் செக் செய்து பாதுகாத்து வருகிறாராம் அந்த நடிகையின் அம்மா.

ஆனால், தனது படத்தில் கமிட்டான அந்த நடிகையை எப்படியாவது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கரெக்ட் செய்ய வேண்டும் என நினைத்து ஏகப்பட்ட பிட்டுக்களை போட்டு பார்த்த நடிகருக்கு எதுவுமே இதுவரை ஒர்க்கவுட் ஆகவில்லையாம்.

gossip kollywood actress gossip

அவரது ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது நடிகையின் அம்மா தான் என்பதை தெளிவாக புரிந்துக் கொண்டு நடிகையிடம் அக்காவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு துணைக்கு அழைத்து வா என டார்ச்சர் செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

அழகான அக்கா: நடிகை ஒருமுறை தெரியாத்தனமாக தனது குடும்ப புகைப்படங்களை நடிகரிடம் காட்டிய நிலையில், நடிகையை போலவே அவரது அக்காவும் இருப்பதை பார்த்து விட்டாராம். ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் அந்த நடிகையின் அக்காவையும் நம்ம படத்தில் நடிக்க வைக்கலாம் என்றும் அவரை அழைத்து வா என்றும் ஓயாமல் டார்ச்சர் செய்து வருகிறாராம் அந்த நடிகர்.

தவிக்கும் நடிகை: நடிகர் நேரடியாக எதுவும் பேசவில்லை என்றாலும், அவரது இன்டென்ஷன் தப்பாக இருப்பதை நன்றாக புரிந்துக் கொண்ட நடிகை அவர் சொல்வதை மறுக்கவும் முடியாமல் செய்யவும் முடியாமல் தவித்து வருகிறாராம். அக்காவுக்கு வேலை அதிகம், அவளுக்கு இதில் எல்லாம் இஷ்டம் இல்லை என மறைமுகமாக பேசியும் போன் நம்பர் கொடு நான் பேசுறேன், நான் கூப்பிட்டா நிச்சயம் வருவா என்றெல்லாம் அந்த நடிகர் டார்ச்சர் செய்து வருவதாகவும் கூறுகின்றனர். நடிகையை தாண்டி அவரது அம்மாவிடமும் உங்கள் பெரிய பெண்ணையும் நடிக்க வைக்கலாமே எனக் கேட்கிறாராம்.

ஆப்பு வைத்த அம்மா: நடிகரிடம் போனில் அக்காவை பேச வைத்து தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்பதை சொல்ல வைத்து விட்டாராம் அந்த நடிகையின் அம்மா. ஆனாலும், தொடர்ந்து நடிகையின் அம்மாவை ஷூட்டிங்கிற்கு வராமல் தவிர்க்கவும் பிரைவேட் பார்ட்டிகளுக்கு தனியாக வா என நடிகைக்கு அழைப்பு விடுப்பதுமாக அந்த நடிகர் டார்ச்சர் செய்து வருவதாகவும் நடிகை படத்தின் இயக்குநரிடமே புலம்பிய நிலையில், இயக்குநர் என்ன சொன்னார் என்று தெரியவில்லையாம், சில நாட்களாக ஹீரோ அந்த நடிகையை தொல்லை செய்யவில்லை எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X