அண்ணனுக்கு ஒரு முதல்வர் பதவி பார்சல்: அரசியலில் குதிக்கும் வாரிசு நடிகர்

By Siva

Recommended Video

அப்பாவுக்காக அரசியலுக்கு வரும் வாரிசு நடிகர்!- வீடியோ

சென்னை: வாரிசு நடிகர் ஒருவரை அரசியலில் பெரிய ஆளாக்கிப் பார்க்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்படுகிறாராம்.

சிறு வயதில் இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார் பல திறமை கொண்ட அந்த வாரிசு. சினிமாவுக்கு வந்துவிட்டால் அடுத்து அரசியல் என்பது போன்று பலர் அரசியலுக்கு வருகிறார்கள்.

இந்நிலையில் வாரிசு நடிகரை அரசியல்வாதியாக்கத் துடிக்கிறார் அவரின் பிரபலமான தந்தை.

மகன்

மகன்

தன்னால் அரசியலில் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க நினைக்கிறாராம் தந்தை. மகனை அரசியலில் பெரிய ஆளாக்கிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.

ஆசை

ஆசை

வம்பு தும்புகளில் சிக்கி வந்த வாரிசு நடிகர் தற்போது திடீர் என்று திருந்தி அநியாயத்திற்கு நல்லவராகிவிட்டார். இந்த மாற்றத்திற்கு பின்னால் அப்பாவின் அரசியல் ஆசை உள்ளதோ?

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

ஜல்லிக்கட்டு பிரச்சனை முதல் காவிரி நீர், ஸ்டெர்லைட் பிரச்சனை வரை குரல் கொடுத்துள்ளார் வாரிசு நடிகர். ஒரு காலத்தில் அவர் பேச்சை கண்டுகொள்ளாத மக்கள் தற்போது அவருக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். காவிரி விஷயத்தில் அவர் செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்கு

முழுக்கு

நடிகர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாகக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அப்படி என்றால் இவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவாரோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X