மாட்டிக்கிட்ட பங்கு.. மாஸ் நடிகருக்கும் மேனேஜருக்கும் சண்டை மூட்டிவிட்ட தமாஸ் ஹீரோ.. சோத்துல பூசணிக்காய்?
சென்னை: எதுக்குமே தான் காரணமில்லை என்றும் எல்லாத்துக்கும் உங்க மேனேஜர் தான் காரணம் என்பது போல தமாஸ் நடிகர் கோர்த்துவிட்டு பேசிய நிலையில், என்கிட்ட கேட்காமலே எப்படி நீயா முடிவெடுத்து பேசிட்டியா என்றும் டபுள் கேம் ஆடுறியான்னு மேனேஜரை விளாசி விட்டாராம் மாஸ் ஹீரோ என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மாஸ் நடிகர் இன்னொரு வேலையில் பிசியாக இருந்த நிலையில், தமாஸ் நடிகர் எல்லாம் ஒரு போட்டியா என எண்ணி மாஸ் நடிகர் பேசியது போலவே பதில் சொல்லிவிட்டாராம் மேனேஜர் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஆனால், தமாஸ் நடிகர் பண்ண தில்லாலங்கடி வேலையை கையும் களவுமாக மாஸ் நடிகரிடம் ஆதாரத்துடன் சொல்லி அதன் பின்னர் தான் மேனேஜர் தப்பித்தார் என்று அதிர்ச்சி கிளப்புகின்றனர்.
வேதனையில் நடிகர்: ஒன்றுக்கு பல வேலைகளில் செம பிசியாக இருந்த மாஸ் நடிகருக்கு தேவையில்லாத தலைவலியாக அந்த பெரிய சர்ச்சை ஒன்று வந்து தலையை பிய்த்து எடுத்துக் கொண்டிருந்த நிலையில், யாரிடமும் பேசாமல் அப்படியே வீட்டுக்குள்ளே முடங்கி விட்டார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து சைக்கிள் கேப்பில் தமாஸ் ஹீரோ டிரெய்னையே ஓட்டி விட்டார் என்கின்றனர்.
நான் சொன்னாலே போதும்: தமாஸ் நடிகர் மேனேஜரிடம் இந்த பஞ்சாயத்தை தெளிவா சொல்லிடுங்க என சொன்ன நிலையில், மாஸ் ஹீரோவிடம் இப்போதைக்கு பேசி அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்கிற முடிவில் நமக்குத்தான் ஒரு வாரம் டைம் இருக்கே மொத்தமாக கல்லா கட்டிவிடலாம் என நினைத்து தமாஸ் நடிகருக்கு இவராகவே க்ரீன் சிக்னல் காட்டி விட்டார் என்கின்றனர்.
வெளுத்து விட்ட மாஸ் நடிகர்: சமீபத்தில், பூசணிக்காய் சோற்றில் மறைத்து பேசிய தமாஸ் நடிகரின் பேச்சைக் கேட்டு நான் எப்போ அப்படியெல்லாம் பர்மிஷன் கொடுத்தேன். என்கிட்ட எதுவுமே இதைபத்தி சொல்லலையே ஏன்னு மேனேஜரை விளாசி எடுக்க, அவர் அப்போ சொன்னது வேற, ஆனால், இப்போ கடைசியா நடந்ததே வேறு என மேனேஜர் சரண்டராக மாஸ் நடிகர் தமாஸ் நடிகர் மீது செம டென்ஷன் ஆகிவிட்டார் என கிசுகிசுக்களை கிளப்பி விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











