பிசினஸில் டல் அடிக்கும் பிரைட் நடிகரின் படம்?.. எல்லாத்துக்கும் காரணம் அந்த பழைய ரெக்கார்டு தானா?

By Staff

சென்னை: வி நடிகருக்கு விழுந்த அடியை போலவே அடுத்ததாக பிரைட் நடிகருக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரிய இடி விழப்போகுது என இப்போதே கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. அதற்கு காரணம் அவரது பழைய டிராக் ரெக்கார்டுகள் தான் என்கின்றனர்.

தொடர்ந்து ரசிகர்களுக்கான படங்களை கொடுத்து மாஸ் நடிகர் தனது இமேஜயும் பாக்ஸ் ஆபீஸையும் தக்க வைத்தது மட்டுமின்றி ஒவ்வொரு படத்துக்கும் அதை உயர்த்திக் கொண்டே செல்லும் வேலையை அட்டகாசமாக செய்து வந்த நிலையில் தான் அவருக்கும் கோலிவுட்டுக்கும் நல்ல வசூல் வேட்டை கிடைத்து வருகிறது என்கின்றனர்.

Popular Actor upcoming movie business seems little bit dull due to his previous movie performance

பல ஆண்டுகளாக இதே வேலையைத்தான் உச்ச நடிகரும் செய்து வந்த நிலையில், இன்றைக்கும் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது என்கின்றனர். ஆனால், டாப் நடிகர், பிரைட் நடிகர் மற்றும் வி நடிகர் உள்ளிட்ட அடுத்த கட்ட நடிகர்கள் எல்லாம் இதனை தொடர்ந்து தக்க வைக்க தவறியது தான் அவர்களின் நல்ல படங்கள் கூட பெரிதாக வசூலிக்க முடியாமல் திணறி வருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

பிசினஸ் ரொம்பவே டல்லாம்: தொடர்ந்து தனது புதிய படத்துக்கு நாடு முழுவதும் பிரைட் நடிகர் புரமோஷன் செய்து வந்தாலும் கடைசியாக நடிகர் பில்டப் கொடுத்து வெளியிட்ட அந்த படம் ஒட்டுமொத்தமாக சொதப்பிய நிலையில், பல விநியோகஸ்தர்கள் நம்பி படத்தை வாங்கி நஷ்டமடைந்தனர். இந்நிலையில், மீண்டும் இந்த நடிகரின் படத்தை எந்தளவுக்கு நம்பி வாங்கலாம் என்கிற தயக்கத்துடன் பலரும் இருப்பதால் இன்னமும் பல பிசினஸ்கள் நடைபெறாமல் ரொம்பவே டல் அடித்து வருவதாக கூறுகின்றனர்.

என்டர்டெயின்மென்ட் குறைவு: கடைசியாக வெளியான டாப் நடிகரின் படத்தில் கதை சிறப்பாக இல்லை என்றாலும் கடைசி வரை என்டர்டெயின்மென்ட்டுக்கு குறைவே இல்லாமல் இருந்த நிலையில் தான் அந்த படம் தாக்குபிடித்து ஓரளவுக்கு வசூலை தமிழ்நாட்டில் கல்லா கட்டியது என்றும் பிரைட் நடிகரின் இந்த படத்தில் என்டர்டயின் மென்ட் ஏரியா ரொம்பவே அடிவாங்கியிருப்பதாக விநியோகஸ்தர்கள் ஃபீல் செய்து வருவதுதான் பிசினஸ் பிக்கப் ஆகாமல் போக முக்கிய காரணம் என்கின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி: வெறும் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இயக்குநர் இந்த படத்தை செதுக்கியுள்ளார். ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸை படம் எந்தளவுக்கு தியேட்டருக்கு கொண்டு வரும் என்பது டவுட்டு தான் என்கின்றனர். கடைசியாக வி நடிகர் நடித்த படமும் வசூலில் அடிவாங்க முக்கிய காரணமே அதுதான் என்கின்றனர். ஹீரோயின் போர்ஷன் மற்றும் பாடல்கள் தான் படத்தைக் காப்பாற்ற வேண்டும் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர். எது எப்படி இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் படம் ஓடுவதையும் வசூல் ஈட்டுவதையும் தடுக்க முடியாது என்றும் ஆனால், அதே நேரத்தில் படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை என்றால் நடிகருக்கு மீண்டும் அடி கன்ஃபார்ம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

நல்லா இருக்கு: ஆனால், சினிமா வட்டாரத்தில் படத்தைப் பார்த்த சிலர் படம் பரபரப்பாக கடைசி வரை செல்கிறது என்றும் ஆரம்பத்தில் பிசினஸ் பிக்கப் ஆகவில்லை என்றாலும், படம் வெளியான பின்னர், பிக்கப் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X