இந்த படமும் போச்சுன்னா அவ்ளோ தான்.. டென்ஷனான தமாஸ் நடிகர்.. அரசியலால் வந்த வினை?

By Staff

சென்னை: அரசியல் பிரபலத்தின் ஆர்டர் காரணமாகத்தான் மாஸ் நடிகர் படத்துடன் தமாஸ் நடிகர் படமும் மோத வேண்டிய சூழல் ஏற்பட்ட உடனே அண்ணா இதுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என போனே போட்டு பேசிவிட்டாராம் நடிகர் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏதுமில்லை என்றாலும், தமாஸ் நடிகரை மாஸ் நடிகரின் ரசிகர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. தமாஸ் நடிகரின் படத்தின் எந்தவொரு அப்டேட் வந்தாலும், அடுத்த நொடியே அதை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கும் முயற்சியில் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றனர்.

Popular Actor upset after his upcoming movie updates getting huge troll

ஏற்கனவே இந்த ஆண்டு தமாஸ் நடிகர் நடித்த படமே பெரிதாக ஓடாத நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே பெரிய அடி வாங்கினால் அதன் பின்னர் தனது திரைப் பயணம் கேள்விக்குறியாகும் என்பதை யோசித்துக் கொண்டிருந்த நடிகருக்கு இசை பார்த்த வேலையும் சுத்தமாக பிடிக்கவில்லை என பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

ஒல்லி நடிகருடன் நெருக்கம்: ஏற்கனவே அந்த இசைக்கும் ஒல்லி நடிகருக்கும் இடையே நல்ல நெருங்கிய நட்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் பிரைட் நடிகர் படத்துக்காக கமிட் செய்த நிலையில், தான் தொடர்ந்து தமாஸ் நடிகர் படத்துக்கும் வேலை பார்த்து வருகிறாராம். இந்நிலையில், தனது பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டை கொடுக்காமல், கடமைக்கு என்றே ஒரு வேலையை பார்த்து விட்டுள்ளார் மியூசிக் என யூனிட்டுக்குள்ளே பேச்சுக்கள் கிளம்ப தமாஸ் நடிகர் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்கின்றனர்.

இயக்குநர் மீது நம்பிக்கை: எப்படி இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை மற்றும் அதனை காட்டும் திரைக்கதை என இயக்குநர் நமக்கு நல்ல படத்தை கொடுத்துவிடுவார் என்பதில், நடிகருக்கு துளியும் டவுட்டே இல்லையாம். ஆனால், அவரை தவிர சுற்றியுள்ளவர்கள் மற்றும் அரசியல் பின்னணி உள்ளிட்டவை ஆப்பு வைத்து விடாமல் இருந்தாலே போதும் என ரொம்பவே கவனமாக இருந்து வருகிறாராம் தமாஸ் நடிகர் எனக் கூறுகின்றனர்.

விரைவில் ரிசல்ட்: எப்படி இருந்தாலும், தமாஸ் நடிகரின் நியாயமான அச்சம் கூடிய விரைவிலேயே தவிடு பொடியாகி விடும் என்றும் மாஸ் நடிகர் படத்தை விட தமாஸ் நடிகரின் படம் தான் தரமாக உருவாகி உள்ளது என்றும் இன்சைடு ரிப்போர்ட்டுகள் கசிந்து வரும் நிலையில், நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X