ஹீரோவா நடிச்சாலே ஓட மாட்டேங்குது.. இதுல தயாரிப்பாளருக்கு தண்டச் செலவு இழுத்து விடும் பிரபல நடிகர்?

By Staff

சென்னை: ஆவேசம் பகத் ஃபாசில் மாதிரி ஹீரோவாக நடித்தால் படங்கள் ஓடாமல் சொதப்புகின்றன. அதேசமயம் வில்லனாக நடித்தால் படங்கள் வேறலெவலில் ஓடி வரும் அந்த நடிகர் இந்த முறை முழு நம்பிக்கையுடன் தனது படத்துக்காக பெரியளவில் புரமோஷன்களை செய்து வருகிறார்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் முதல் ஹீரோயின்கள் வரை என பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு வந்து இறக்கி தயாரிப்பாளருக்கு செலவை இழுத்து விட்ட அந்த நடிகர் தற்போது புரமோஷனுக்கும் தேவையில்லாமல் சில கோடிகளை தண்டச் செலவாக இழுத்து விட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

gossip kollywood


எவ்வளவு பணம் கொட்டுறோம்கிறது முக்கியமில்லை, அதைவிட அதிகமாகவே அள்ளுவீங்க என அந்த பிரபல நடிகர் ஓவர் பில்டப் கொடுத்து வருகிறாராம். ஆனால், நடிகரின் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூடுமா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது என தயாரிப்பாளரே நெருங்கிய வட்டத்திடம் பேசி புலம்பியதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஜாதகம் அப்படி?: இந்த ஆண்டு பல தமிழ் படங்களின் ஜாதகம் அப்படித்தான் உள்ளது. குறைவான செலவில் அதிகமாக பணத்தை வாரிக் கொட்டாமல் தரமான படத்தை எடுத்தால் ஓரளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கையிலிருக்கும் காசை எல்லாம் காலி செய்து விட்டு கடனுக்கும் காசு வாங்கி படங்களுக்கு செலவு செய்தால் அந்த படங்கள் திடீரென படுத்து விட்டால் தயாரிப்பாளரால் தலை தூக்கவே முடியாது எனக் கூறுகின்றனர்.

பலரிடம் கெஞ்சி: எந்தவொரு படமும் போட்டியாக வெளியாக வேண்டாம் என பலரிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த தயாரிப்பாளர் நடிகரின் படத்தை சோலோ ரிலீஸாக பிளான் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஒல்லி நடிகரின் படம் தள்ளிப் போக காரணமே இந்த படத்தின் தயாரிப்பாளர் நேரடியாக வைத்த கோரிக்கை தான் காரணம் என்றும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

தேவையில்லாத செலவு: இந்நிலையில், இந்த படத்தை வெளிநாட்டில் தான் புரமோட் செய்வேன் என ஆளே இல்லாத கடைக்குப் போய் சில கோடிகளை செலவு செய்து விட்டு டீ ஆற்றி வந்திருக்கிறாராம் அந்த நடிகர் என்றும் இதில், தயாரிப்பாளருக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், நடிகரின் மனம் குளிர்ந்தால் தான் அடுத்தடுத்து அவரை வைத்து சம்பாதிக்க முடியும் என்பதால் படம் ரிலீஸ் ஆகும் வரை அடக்கி வாசித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X