காமெடி நடிகரை நம்பி ஏமாந்த பிரைட் நடிகர்.. பிசினஸ் கூட ஆகாத அளவுக்கு அல்வா கிண்டி வச்சிருக்காரா?

By Staff

சென்னை: பெரிய போட்டி இல்லை என ஜாலியாக இருந்து விட்ட பிரைட் நடிகருக்கு சின்ன நடிகர்கள் எல்லாம் பெரிய போட்டியாளர்களாக மாறி ஆப்பு அடித்து வருகின்றனர். ஒல்லி நடிகர் எல்லாம் ஓய்வே இல்லாமல் ஓடி ஓடி நடித்தாலே ஒரு படமும் பெரிதாக ஓட மாட்டேங்குதே என ஒப்பாரி வைத்து வரும் நிலையில், பிரைட் நடிகர் தேவையில்லாமல் தனது பொன்னான நேரத்தை வீணடித்து விட்டார் என்று கூறுகின்றனர்.

மாஸ் நடிகர் ஆளவிடுப்பா சாமி என ஒதுக்கிய இயக்குநரிடம் வான்டட்டாக சென்று சிக்கிக் கொண்ட பிரைட் நடிகர் பல மாதங்களாக பயங்கர மன உளைச்சலில் இருப்பதாகவும் பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க முடியாமல் பல விஷயங்களை அவாய்ட் பண்ணி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Popular Actor upset over Comedy Actor due to poor business

எப்படியாவது தமிழ் சினிமாவுக்கு பெரிய படத்தை கொடுத்து விட வேண்டும் என அவர் முயற்சி எடுத்தாலும், அவர் தேர்வு செய்யும் டைரக்டர்கள் தான் அவருக்கு மிகப்பெரிய எதிரிகளாக மாறி வருகின்றனர் என்று கூறுகின்றனர்.

வாயால் வடை சுட்டு: காமெடி நடிகர் வாயால் வடை சுட்டு கதை சொன்னதை கேட்ட மாஸ் நடிகர் இவரை நம்பி போனால் அதோகதிதான் ஆகிவிடும் என நினைத்து வேணாம் வேற ஆளை பார்த்துக் கொள்கிறேன் என நகர்ந்து விட்டார். மாஸ் நடிகர் நகர்ந்த நிலையில், பிரைட் நடிகர் பிரைன் வாஷ் பண்ணி காமெடி நடிகர் உள்ளே புகுந்து அவரை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் நடிகர் போர்ஷனை தவிர படத்தில் வேறு எதுவுமே சரியாக இல்லை என்பதால் தான் இவ்வளவு சிக்கல் என்று கூறுகின்றனர்.

பிசினஸ் ஆகாமல்: பொதுவாக பிரைட் நடிகர் படங்கள் எல்லாம் சுமாராக இருந்தால் கூட நல்லாவே பிசினஸ் ஆகிவிடும். ஆனால், இந்த முறை நடிகரின் படம் பல மாதங்களாக பிசினஸ் ஆகாமல் இருக்கும் அளவுக்கு ரொம்பவே சுமாரான மேக்கிங்கை காமெடி நடிகர் செய்துவிட்டார் என்றும் ஆனால், அதை வைத்து பெரிதாக சம்பாதிக்க நினைத்தால், யார் நம்பி ஏமாறுவார்கள் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர். பல படங்கள் இது போலத்தான் வியாபாரமே ஆகாமல் பல ஆண்டுகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாகவும், அதுபோன்ற ஒரு நிலைமை இந்த படத்துக்கு வந்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது என பகீர் கிளப்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X