அவ்ளோ பேசியும் பிசினஸுக்கு எதுவும் உதவலையே.. அப்செட்டில் வம்பு நடிகர்.. அந்த படத்துக்குத்தான் பிளஸ்!
சென்னை: மீண்டும் பழையபடி மாஸ் காட்டுகிறேன் என்கிற பெயரில் கத்த ஆரம்பித்து விட்டார் அந்த வம்பு நடிகர். அவ்வளவு உருக்கமாக பேசியும் தான் நடித்துள்ள புதிய படத்துக்கு பிசினஸ் ரீதியாக ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததும் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் அந்த வம்பு நடிகர்.
கதைப்படி ஹீரோவே இல்லாத நிலையிலும், தான் தான் ஹீரோ என படத்தையே டோட்டலாக தனது படமாக மாற்றிவிட்டார் அந்த வம்பு நடிகர் என பேச்சுக்கள் பரபரப்பாக கிளம்பி உள்ளன.
ஏற்கனவே முன்னாள் காதலியின் படத்திலும் இதே வேலையைத் தான் அந்த வம்பு நடிகர் செய்திருந்தார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தொண்டைக் கிழிய பேசினாலும்
என்ன தான் தொண்டைக் கிழிய பேசினாலும் வம்பு நடிகரின் படங்களுக்கு சமீப காலமாகவே எந்தவொரு ஹைப்பும் இல்லாமல் படங்கள் சொதப்பி வருகின்றன. போன படத்துக்கும் இதே போலத்தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் தெரியுமா என கதைகளை அளந்து விட்டும் அந்த படமும் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், இந்த படமாவது தன்னை காப்பாற்றும் என ரொம்பவே நம்பி வருகிறார் நடிகர்.

ஏகப்பட்ட மாற்றங்கள்
கிடப்பில் கிடந்த படத்தை தூசு தட்டி ஏகப்பட்ட கரெக்ஷன்களை செய்து பாதி படத்தையே தன் இஷ்டத்துக்கு இயக்கி இந்த அளவுக்கு கொண்டு வர காரணமே அந்த நடிகர் தான் என்றும் இந்த படத்தை வைத்து அடுத்தடுத்த படங்களின் பிசினஸையும் அதிகரிக்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் என்றும் கூறுகின்றனர்.

போட்டிக்கு வந்த காமெடி நடிகர்
ஆனால், எந்தவொரு பில்டப்பும் இல்லாமல் வம்பு நடிகர் படத்துக்கு பலத்த போட்டியாக தற்போது அந்த காமெடி நடிகரின் படம் குறுக்கே வந்திருப்பது வம்பு நடிகரை ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளது என்றும் பிசினஸ் மொத்தமும் அந்த படத்துக்குத் தான் நடப்பதாகவும் இந்த படத்தை யாருமே பெரிதாக கண்டுக்கவே இல்லை என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

பிசினஸ் சூடு பிடிக்குது
வம்பு நடிகர் படத்துக்கான பிசினஸ் சூடு பறக்கும் என ஏகப்பட்ட செலவுகளை தயாரிப்பாளர் செய்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மாறாக அந்த காமெடி நடிகரின் படத்துக்குத்தான் பிசினஸ் அதிகரித்து வருவதாகவும் தியேட்டர்கள் எல்லாம் அந்த படத்துக்கே அதிகம் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதுவரை அந்த இயக்குநர் சொதப்பவே இல்லை என்பதால் ரொம்பவே பெரிய எதிர்பார்ப்பு அந்த படத்துக்கு கிடைத்தி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

நடிகர் அப்செட்
இத்தனை வேலைகளை பார்த்தும் எதுவும் வேலைக்கு ஆகவில்லையே என நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். முதல் நாளில் மொத்த வசூலையும் தட்டித் தூக்கவே ஒரு நாள் முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். சத்தமே இல்லாமல் சைலன்ட்டாக வந்து அந்த காமெடி நடிகரின் படம் சம்பவம் பண்ணப் போவதாக பெரும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











