பாவம் பிரைட் நடிகர்.. படத்துக்கு ஹைப்பே இல்லையாம்.. மீண்டும் ஒடிடிக்கே ஓடி போய்விடுவாரோ?

By Staff

சென்னை: சில ஆண்டுகளாக தியேட்டருக்கு கும்பிடுப் போட்டு ஓடிடி பக்கம் மனைவியின் பேச்சைக் கேட்டு நகர்ந்த பிரைட் நடிகருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடியிலேயே படத்தை பார்த்து பழகி போன அவரது ரசிகர்கள் இந்த முறையும் அப்படியே படத்தை விட்டுடுங்க தலைவா என்றே சொல்லும் அளவுக்கு மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

முன்னணி நடிகர்களுடன் போட்டிப் போடாமல் தனியாக தனது படத்தை ரிலீஸ் செய்ய நினைத்த நேரத்தில் பக்கத்து ஸ்டேட் பிரம்மாண்ட நடிகர் போட்டிக்கு வருவார் என்பதை கொஞ்சமும் இவர் எதிர்பார்க்கவே இல்லையாம்.

டிரெண்டே ஆகல

டிரெண்டே ஆகல

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் பட அறிவிப்புகள் கேட்டே சமூக வலைதளங்களை ரசிகர்கள் தெறிக்கவிட்டு வரும் நிலையில், பெரிய அப்டேட்டை வாரி கொடுத்தும் அதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்ய முடியாமல் அப்படியே கைவிட்டு விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எந்தவொரு ரெக்கார்டு சாதனையும் படைக்காத நிலையில் நடிகருக்கே இந்த முடிவு சரியானதா? என்ற சிந்தனை வந்து விட்டதாம்.

ஓடிடி பக்கம்

ஓடிடி பக்கம்

கடந்த சில ஆண்டுகளாக மனைவியின் பேச்சை கேட்டு ஓடிடி பக்கமே ஒட்டிக் கொண்டு இருந்தது தான் இத்தனைக்கும் காரணம் என்றும் மார்க்கெட்டில் அந்த நடிகருக்கு பெரிய மதிப்பே இல்லாமல் போய்விட்டதாம். நேற்று சினிமாவுக்கு வந்த அந்த இளம் நடிகரின் படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அவர் படத்துக்கு ஏற்பட்டுள்ள ப்ரீ ரிலீஸ் பிசினஸ் கூட இந்த படத்துக்கு ஆகவில்லையாம்.

அந்த நம்பிக்கை

அந்த நம்பிக்கை

எப்படி இருந்தாலும், நல்ல படத்தை கொடுத்தால், ரசிகர்களும் மக்களும் மீண்டும் கை கொடுப்பார்கள் என்கிற பெரிய நம்பிக்கையுடன் தான் தற்போது தியேட்டர் ரிலீசுக்கே அந்த பிரைட் நடிகர் தயாராகி இருப்பதாக் கூறப்படுகிறது. தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் நிலையில், நிச்சயம் லாபத்திற்கு பஞ்சம் இருக்காது என்கிற நம்பிக்கையில் தான் தயாரிப்பு தரப்பும் இவரை நம்பி இஷ்டத்துக்கு செலவு செய்திருக்கிறதாம்.

பிரம்மாண்ட நடிகர் பிரச்சனை

பிரம்மாண்ட நடிகர் பிரச்சனை

இப்படி இங்கேயே பல பிரச்சனைகள் இருக்க போதாக் குறைக்கு பக்கத்து ஸ்டேட் பிரம்மாண்ட நடிகர் வேறு இவருக்கு போட்டியாக படத்தை பல்வேறு மொழிகளிலும் ரிலீஸ் செய்கிறார். அதனால், தியேட்டர்கள் யாருக்கு அதிகம் ஒதுக்குவது என்கிற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டாப் நடிகரின் படம் இரு வாரங்கள் மட்டுமே கடக்கும் என்பதால், அந்த படத்தை மொத்தமாக தூக்கினால் தான் இந்த இரு நடிகர்களுக்கும் தியேட்டரை பிரித்துக் கொடுக்கவே முடியும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.

நிறுத்தி வைப்பு

நிறுத்தி வைப்பு

வரிசையாக ஓடிடியில் தனது தயாரிப்பில் மாதம் ஒரு படத்தை வெளியிட்டு வந்த அந்த பிரைட் நடிகர் சில மாதங்களாக அதனை நிறுத்தி வைக்க காரணமும் தியேட்டர் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தானாம். டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்ததும் ரசிகர்கள் அந்த டாப் நடிகர் படத்துக்கு முண்டியடித்துக் கொண்டு வந்து வாங்கியதை போல வாங்குவார்களா? வசூல் எப்படி இருக்கும் என ஏகப்பட்ட குழப்பத்துடன் உள்ளாராம் அந்த நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X