பல கோடி பாழாய் போயிடும்.. அந்த லேடி இயக்குநருக்கும் பிரைட் நடிகருக்கும் சண்டையா?.. காரணம் அவரா?

By Staff

சென்னை: லேடி இயக்குநரின் படத்தில் நடித்து ஏகப்பட்ட பாராட்டுக்களை குவித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் அது எந்தவொரு பயனையும் அந்த பிரைட் நடிகருக்கு கொடுக்கவில்லை. இந்த படத்தை எப்படியாவது வேறொரு மொழியில் செய்து கல்லா கட்டி விடலாம் என இயக்குநர் ஐடியா கொடுக்க அதற்கு எந்தவொரு முன் யோசனையும் இல்லாமல் நடிகர் தலையாட்டியது மட்டுமின்றி தனது தயாரிப்பிலேயே படத்தையும் எடுத்துள்ளார்.

ஆனால், லேடி இயக்குநர் சிபாரிசு செய்த அந்த பிரபல நடிகர் படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து பல தயாரிப்பாளர்களுக்கு கோடி கணக்கில் பட்டை நாமம் போட்டு வருவதை பார்த்து பிரைட் நடிகருக்கு நெஞ்சே வெடித்து விட்டது என்கின்றனர்.

Popular actor upset over lady director spoils his money with unlucky hero movie

வேறொரு நடிகரை தான் நடிகரின் மனைவி முதலில் சிபாரிசு செய்திருந்தாராம். ஆனால், இயக்குநர் சொன்னால் சரியாக இருக்கும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என நடிகர் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி தற்போது மனைவியிடம் வசமாக மாட்டிக் கொண்டார் என்றும் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கவே அந்த லேடி இயக்குநர் தான் காரணம் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

பல கோடி போச்சே?: அந்த நடிகரை நம்பி பல கோடிகளை கொட்டி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் வரிசையாக தலையில் துண்டை மாட்டிக் கொண்டு பெரும் கடனில் சிக்கித் தவித்து வருகின்றனர். பலரை காவு வாங்கிய அந்த சுவர் தற்போது பிரைட் நடிகரையும் போட்டுத் தள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர்.

லேடி இயக்குநர் பார்த்த வேலை: பிரைட் நடிகரை பெண்டு எடுத்து அப்படியொரு தரமான படத்தை உருவாக்கினாலும், அந்த படம் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. பிரபல நடிகரை வைத்து ரீமேக் செய்து ஹிட் அடித்து கல்லா கட்டலாம் என ஆசையை மூட்டி பிரைட் நடிகரின் பல கோடி ரூபாயை செலவு செய்ய வைத்து விட்டாராம் அந்த லேடி இயக்குநர். ஆனால், அவர் தேர்வு செய்த நடிகர் தற்போது பிரைட் நடிகரை கடன்காரனாகவே மாற்ற போகிறார் என பகீர் கிளப்புகின்றனர். இதன் காரணமாகவே அந்த லேடி இயக்குநருடன் பிரைட் நடிகர் சண்டை போட்டதாகவும் அவருடைய படத்திற்கு வேட்டு வைத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

குடும்பத்தில் விரிசல்: தன்னுடைய பேச்சை நடிகர் கேட்கவில்லை என மனைவியும் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறுகின்றனர். நடிகரின் அடுத்த படம் ஹிட் அடித்தால் மட்டுமே இந்த சிக்கலில் இருந்து அவரால் தப்பிக்க முடியும் என்று கூறுகின்றனர். இல்லையென்றால் மொத்தமும் போய் விடும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X