கடைசியில பொம்மை படம்.. விலங்கு இயக்குநரால் அப்செட்டான பிரைட் நடிகர்.. அடுத்த படமும் போச்சா?

By Staff

சென்னை: கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் படம் கொடுக்க முடியாமல் அடுத்து வந்த இளம் நடிகர்களிடம் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் அடி வாங்கி வருகிறார் அந்த பிரைட் நடிகர்.

தம்பிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர் தனக்கும் ஒரு வெற்றிப் படத்தை கொடுப்பார் என கடைசியாக தலையை கொடுத்த அந்த படமும் சிரிப்பா சிரிக்க வைத்த நிலையில், அடுத்த படத்தை ரொம்பவே கவனமுடன் கொடுக்க வேண்டும் என நினைத்த நடிகர் ஒரு இயக்குநர் படத்தில் இருந்தே அதிரடியாக வெளியேறினார்.

Popular actor upset over live action portions for his next big film

இந்நிலையில், நடிகரை பக்காவாக பிரைன் வாஷ் பண்ணி பெரிய பட்ஜெட் படம் என மீட்டர் போட்ட அந்த விலங்கு இயக்குநர் தற்போது எடுத்து வைத்திருக்கும் படத்தை பார்த்து நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

கதையை கேட்டு கவிழ்ந்த நடிகர்: பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இயக்குநருடன் படம் பண்ணுகிறேன் என வாக்கு கொடுத்த நிலையில், இயக்குநர் சொன்ன கதையை நம்பி அந்த படத்தில் நடிக்க சம்மதமும் தெரிவித்து விட்டார்.

இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட படமாக இந்த படத்தை உருவாக்குகிறேன் என நடிகரை மாய வலையில் விழ வைத்து கடைசியாக நடிகரின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் கனவிலும் மண்ணை அள்ளி அந்த இயக்குநர் போட்டு விட்டார் என பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

பொம்மை படமா: சமீபத்தில் வெளியான அந்த மெகா பட்ஜெட் நடிகரின் படம் எப்படி லைவ் ஆக்‌ஷன் பொம்மை படமாக வந்ததோ அதே போன்ற தொழில்நுட்பத்தில் தான் பிரைட் நடிகரின் பிளாஷ்பேக் போர்ஷனும் படமாக்கப்பட்டு வருவதாக பகீர் கிளப்பும் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையே ஒரு குலுக்கு குலுக்கி உள்ளன.

ஆரம்பத்தில் அது லைவாகவே இருக்கும் என்றே நம்பியிருந்த பிரைட் நடிகரே தற்போது அதன் மேக்கிங் காட்சிகளை பார்த்து என்ன இது பொம்மை படம் போல இருக்கே என அப்செட் ஆகி விட்டாராம்.

Popular actor upset over live action portions for his next big film

கடுப்பில் கிளம்பிய நடிகர்: இதற்கு மேல் இந்த படத்தை பெரிதாக நம்பக் கூடாது என நினைத்த நடிகர் அனிமேஷனாக இருந்தாலும் நம்பும் படி ஹாலிவுட் தரத்துக்கு பண்ணுங்க, இல்லை என்றால் மறுபடியும் வந்து நடிக்க மாட்டேன் என இயக்குநரை எச்சரித்து விட்டே தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றார் என்றும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

இயக்குநர் ஹீரோவின் உத்தரவை மீறி சொதப்பிய காட்சிகளை சரி செய்வாரா? அல்லது பட்ஜெட் தாங்காது என அப்படியே அந்த படத்தை வெளியிடுவாரா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X