என் மேல உனக்கு என்ன அவ்ளோ காண்டு.. இசையமைப்பாளருக்கு போன் அடித்த மாஸ் நடிகர்.. ட்ரிகர் ஆகிட்டாரா?
சென்னை: எப்போதுமே அந்த மாஸ் நடிகர் பாடல்கள் வெளியானால் அதற்கு போட்டியாக எந்தவொரு முன்னணி நடிகர் பாடல்களும் எடுபடாமல் போய் விடும். ஆனால், இந்த முறை இரண்டு படங்களுக்கும் ஒரே இசையமைப்பாளர் என்பதால் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இயக்குநர்கள் தாறுமாறான பாடல்களை அந்த இசையமைப்பாளரிடம் இருந்து கறக்க முயற்சித்து வருகின்றனர்.
மாஸ் நடிகரின் பாடல் வெளியாகி டிரெண்டாகாமல் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உச்ச நடிகரின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பி உள்ளது.

மேலும், தனக்கு எதிராக தரமான சம்பவத்தை செய்ததே அந்த இசையமைப்பாளர் தான் என்பதை புரிந்து கொண்ட மாஸ் நடிகர் டைரக்ட்டா இசைக்கே போன் போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
பாடல் மூலம் பதிலடி: கடந்த சில மாதங்களாகவே உச்ச நடிகரை மதிக்காமல் மாஸ் நடிகர் செயல்பட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், சமூக வலைதளங்களில் மாஸ் நடிகரின் ரசிகர்கள் செய்த அட்டகாசங்களையும் மீடியா பிரபலங்களை வைத்து மாஸ் நடிகரின் வலது கை மறைமுகமாக செய்து வந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டு அமைதியாக இருந்த உச்ச நடிகர் தற்போது தனது திரைப்பட பாடல்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் என அவரது ரசிகர்களே கொண்டாடி வருகின்றனர்.
இசை தான் காரணம்: மாஸ் நடிகருக்கு மாஸாக பாட்டுப் போட்டாலும், அந்த இளம் இசையமைப்பாளர் குடும்ப உறவினரான அந்த உச்ச நடிகருக்காக கூடுதல் எஃபோர்ட் போட்டு அவரை குளிர வைக்கும் வரிகளை எழுத வைத்து பாடல்களை உருவாக்கி ஹிட் அடிக்க வைத்துள்ளார்.
அந்த இசையின் யோசனையில் தான் இப்படியொரு பாடலே உருவாகி உள்ளது என்பதை அறிந்து டென்ஷனான மாஸ் நடிகர் டைரக்ட்டா இசைக்கே போன் அடித்து பேசி விட்டாராம்.
என்மேல என்ன காண்டு: தனக்கு கூட இந்த அளவுக்கு பாட்டுப் போடாமல், அந்த உச்ச நட்சத்திரத்துக்கு ஏன் இப்படியொரு பாட்டுப் போட்டுக் கொடுத்த, அப்படி என்மேல என்ன காண்டு என்றே ஜாலியாக கேட்டு விட்டாராம் அந்த மாஸ் நடிகர்.
அச்சச்சோ எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை, எல்லாத்துக்கும் காரணம் அந்த இயக்குநர் தான், அவர் பண்ண வேலை தான் இதெல்லாம் என கழுத்துக்கு வந்த கத்தியை அந்த இயக்குநர் பக்கம் திருப்பி உள்ளார் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன. மேலும், அடுத்த பாடலில் உங்களுக்கும் ஒண்ணு வெயிட்டா வெச்சு செஞ்சுக் கொடுத்துடுறேன் என்றும் இசை வாக்கு கொடுத்து மாஸ் நடிகரை ஆஃப் செய்து விட்டதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











