பொடிப்பையன்லாம் என் ரூட்ல தலையிடுறதா.. சின்ன ’சி’ மேல கோபப்பட்ட சீனியர் ‘சி’.. அடுத்த பிரச்சனை!
சென்னை: சம்பள பாக்கி பிரச்சனைக் காரணமாக தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அந்த சீனியர் 'சி' நடிகர் சின்ன 'சி' நடிகர் மேல் உச்சகட்ட கோபத்தில் உள்ளாராம்.
குடியும் கும்மாளமுமாக அந்த நடிகர் தனக்கு இருந்த மார்க்கெட்டை இழந்த கேப்பில் இளம் நடிகர் முன்னணி நடிகர்கள் வரிசைக்கு முன்னேறி விட்டார்.
தேவையில்லாமல் திடீரென தனது ரூட்டில் அந்த நடிகர் தலையிடுவது சரியில்லை என சீனியர் 'சி' கோபப்பட்டு பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

சம்பள பாக்கி
தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு சொல்லும் சம்பளத்தை முழுமையாக கொடுப்பதில்லை என்கிற பஞ்சாயத்து பல காலமாகவே இருந்து வருகிறது. ஹீரோக்களுக்கு கோடிக் கணக்கில் சம்பளத்தை ஏற்றி அடுத்த தயாரிப்பாளர்களிடம் செல்லாமல் இருக்க மடக்கும் யுக்தி பின்னாளில் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கே ஆப்பாக முடிந்து விடுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள்
முன்னணி ஹீரோயின்களுக்கு இன்னமும் 5 கோடி ரூபாய் கூட சம்பளம் வழங்காத நிலையில், ஹீரோக்களின் சம்பளம் 100, 105 கோடின்னு ஏறிக் கொண்டே போகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் காலடி பதித்து மற்ற லோக்கல் தயாரிப்பாளர்கள் அதற்கு பிறகு பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதை கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு மாற்றி விடுகிறது.

ஓடாத படத்துக்கும்
ஹீரோக்களும் அதிக சம்பளம் கொடுத்தால் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கதையை கூட கேட்காமல் நடிக்க சம்மதித்து விடுகின்றனர். பின்னர் படம் ஓடவில்லை என்றதும் தயாரிப்பாளர்கள் ஹீரோக்களுக்கு சொன்ன சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள். ஹீரோக்களும் அப்போதைக்கு பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், அட்வான்ஸ் அக்ரீமென்ட் நியாபகம் வரும் போது இந்த பிரச்சனை ஆரம்பமாகும் சின்ன சி நடிகர் விஷயத்திலும் அப்படித்தான் பிரச்சனை உருவானது என்கின்றனர்.

அந்த நடிகரை இழுத்து
இதில், சீனியர் 'சி' நடிகர் படத்தை சம்பள பாக்கி வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில், அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சின்ன 'சி' நடிகர் தேவையில்லாமல் வாய் விட்டது தான் அந்த சீனியர் 'சி' நடிகரை கோபத்திற்கு ஆளாக்கி உள்ளதாக கூறுகின்றனர்.

பொடிப்பையன்
அந்த ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வரும் நடிகர் இந்த விவகாரம் தெரிந்ததும் பொடிப்பையன்லாம் என் ரூட்ல தேவையில்லாமல் தலையிடுறதா என ரொம்பவே காட்டமாக பேசியுள்ளார். இந்த தகவல் கோடம்பாக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஏற்கனவே மற்ற நடிகர்களுடன் சண்டை போக்கை கையண்டு வரும் சீனியர் சி நடிகர் இவரையும் பகைத்துக் கொண்ட நிலையில், அடுத்த பிரச்சனை ஆரம்பமாகி உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











