எவ்ளோ பிளான் போட்டாலும் எதுவும் வொர்க்கவுட் ஆகலையே.. அதில் கை வைத்த பாஸ் நடிகர்.. புலம்பும் ஹீரோ!
சென்னை: சமீபத்தில் வெளியான படத்தை வைத்து ஏகப்பட்ட திட்டங்களை வகுத்திருந்தார் அந்த வம்பு நடிகர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கான பெரிய ஓபனிங் இந்த முறையும் மிஸ் ஆனதால் மனதளவில் ரொம்பவே அப்செட் ஆகி அழத் தொடங்கி விட்டாராம்.
படத்திற்கு தேவையான வெற்றியை விட பெரிய வெற்றியே நடிகரின் அப்பியரன்ஸால் கிடைத்திருப்பதாக ஒரு பக்கம் படக்குழுவினர் சந்தோஷத்தில் இருந்தாலும், ஹீரோவுக்கு பெரிதாக சந்தோஷம் இல்லையாம்.
இந்த முறை தான் பண்ண பில்டப்புக்கு முன்னணி நடிகர்களுக்கு கிடைத்த முதல் நாள் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதில், பாதி கூட வரவில்லை என்பதால் நடிகர் அப்செட் ஆகி விட்டாராம்.

அழுது புலம்பும் நடிகர்
பெரிய வசூலை எதிர்பார்த்த வம்பு நடிகருக்கு படத்துக்கு போதிய வசூல் வந்தும் பத்தல பத்தல என அழுது புலம்பியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தை வைத்துத் தான் அவரது அடுத்த படத்திற்கே மிகப்பெரிய ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தாராம் அந்த நடிகர். முந்தைய படத்தை விட இந்த படத்திற்கு பெரிய அளவில் வித்தியாசம் வரவில்லை என்பதால் தான் நடிகர் ரொம்ப டென்ஷன் ஆகி இருப்பதாக கூறுகின்றனர்.

நடிகர் அதிருப்தி
நாள் முழுக்க நடிகரின் மிரட்டலான நடிப்பும் அவர் படத்துக்காக போட்ட கடின உழைப்பும் பேசப்படும் என ரொம்பவே கனவு கண்டு கொண்டிருந்தவருக்கு, ஒரு சிறிய அபத்தமான நிகழ்ச்சி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால், அதுபற்றி வாய் கூட திறக்காத அளவுக்கு அதிருப்தி அடைந்து விட்டாராம் அந்த நடிகர் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

பெரிய பட்ஜெட்
இந்த முறை தனது பலத்தை காண்பித்தால் தான் அடுத்த அந்த பெரிய பட்ஜெட் படத்துக்கான வியாபாரத்தை பெரிதாக பண்ணமுடியும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தான் நடிகர் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வராதது தான் அவரது புலம்பலுக்கு காரணமே என்கின்றனர்.

கை வைத்த பாஸ் நடிகர்
நடிகரின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்த்து பாஸ் நடிகரும் சற்றே அப்செட் ஆகி உள்ளதாகவும், மேலும், சில கோடிகளை பட்ஜெட்டில் இருந்து குறைத்து விடப் போவதாகவும் அவர் முடிவு செய்திருப்பதாக நடிகர் காது வரைக்கும் விஷயம் சென்றதால் மனுஷன் ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டதாக கூறுகின்றனர். அதிக பட்ஜெட்டை இவரை நம்பி இறக்கினால் அதற்கு ஏற்ற லாபம் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. படத்தின் பட்ஜெட்டில் கை வைக்கிறேன் என்பதே தனது சம்பளத்தில் மேலும், கை வைப்பதாக ஆகி விடுமே என்று தான் நடிகர் புலம்பவே காரணம் என்கின்றனர்.

உறுதியுடன் நடிகர்
இந்த படம் தனக்கான ஸ்கோப்பை கொடுக்கவில்லை என்றாலும், மாஸ் அந்தஸ்த்தை மெருகேற்றி இருப்பதால், அடுத்த படம் பிரம்மாண்டமாக உருவாகும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ப்ரீ ரிலீஸ் பிசினஸ் செய்து அடுத்த படத்தின் வசூலை மிகப்பெரிய அளவுக்கு கொண்டு செல்ல தன்னால் முடியும் என நடிகர் பாஸ் நடிகருக்கு உறுதி அளித்திருப்பதாகவும், இயக்குநரின் கதையும் கண்டிப்பாக வெற்றிப் படத்தை கொடுக்கும் என்பதால், பட்ஜெட்டை குறைப்பதா வேண்டாமா? என்கிற பேச்சுவார்த்தையில் பாஸ் நடிகர் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த சிக்கல் இருக்கு
எப்படி இருந்தாலும் நடிகரின் அடுத்த படத்தை எந்தவொரு பெரிய படத்துடனும் கிளாஷுக்கு விடாமல் சோலோ ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்றும் ஆனால், விடுமுறை நாள் ஒன்றை டார்கெட் செய்து படத்தை விட்டால் தான் வசூல் அதிகரிக்கும் என இடியப்ப சிக்கலில் படக்குழு இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











