டபுள் மீனிங் இயக்குநர் செய்த அந்த செயல்.. கடுப்பான வி நடிகர்.. பிசினஸுக்கு வந்த சிக்கல்?
சென்னை: வம்பு நடிகரை வைத்து வேலைக்கு ஆகாத ஒரு படத்தை கொடுத்து அந்த நடிகரையே பெரும் சிக்கலில் சிக்க வைத்தவர் அந்த டபுள் மீனிங் இயக்குநர் தற்போது வி நடிகரையும் பெரிய விபரீதத்தில் சிக்க வைத்து இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அடல்ட் இயக்குநராக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக டபுள் மீனிங் வசனங்களையும் டபுள் மீனிங் கதைகளையும் படமாக எடுத்து வந்தவர் அந்த இளம் இயக்குநர்.
அவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்தாலும், அவரை நம்பி தனது அடுத்த படத்தை வி நடிகர் கொடுத்த போதே ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன.

விரக்தியில் வி நடிகர்
எவ்வளவு தான் கஷ்டப்பட்டு ஆக்ஷன் காட்சிகளில் நடித்தாலும், ஒரு படம் கூட ஓடுவது இல்லை நடக்கக் கூட மாட்டேங்கிறதே என்கிற விரக்தியில் அந்த வி நடிகர் உள்ளார். காதலித்த பெண்ணும், நிச்சயித்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் கழட்டி விட்டுச் சென்றது ஒரு பக்கம் மன வருத்தத்தை கொடுத்தால், மறு பக்கம் படங்கள் எதுவுமே வொர்க்கவுட் ஆகாதது நடிகரை போட்டு வாட்டி வதைத்து வருகிறது.

டபுள் மீனிங் இயக்குநர்
தொடர்ந்து ஒடாத படங்களை இயக்கினாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அந்த இயக்குநருக்கு குவிந்த வண்ணமே உள்ளன. டபுள் மீனிங்கில் ஆபாச படங்களை இயக்கி இளம் ரசிகர்களை கவர பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வரும் அந்த இயக்குநர் இனிமேல் தனது ஆபாச ரூட் வொர்க்கவுட் ஆகாது என வி நடிகரை வைத்து ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார்.

ஆளுக்கொரு டோப்பா
ஏற்கனவே அந்த வம்பு நடிகருக்கு பல வித டோப்பாக்களை மாட்டி விட்டு படத்தை பணால் ஆக்கிய டபுள் மீனிங் இயக்குநர் இந்த முறை வி நடிகர் படத்தில் வரும் நடிகர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு டோப்பாவாக மாட்டி விட்டு பீரியட் படம் எடுக்கிறேன் என பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்படும் மாறுவேட போட்டியை போல விளையாட்டுக் காட்டி வருகிறார்.

இயக்குநரின் செயலால் நடிகர் அப்செட்
கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் இஷ்டத்துக்கு தினமும் பல லட்ச ரூபாயை செலவு செய்து வருவதால் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். இந்நிலையில், வி நடிகரின் மனதையும் அவரது படத்தின் பிசினஸையும் பாதிக்கும் வேலை ஒன்றை சமீபத்தில் அந்த இயக்குநர் செய்தது பெரும் பஞ்சாயத்தாக மாறி உள்ளது.

அந்த படத்தை வெளியிட்டு
பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்ய முடியாமல் பொட்டியில் கிடந்த அந்த படமெடுக்காத பாம்பை சமீபத்தில் வெளியிட்டு அடுத்த படத்திற்கும் சேர்த்து அந்த இயக்குநர் பெரிய ஆப்பாக வைத்து விட்டார் என்கிற பேச்சு கோலிவுட்டில் பரவலாக பரவி வரும் நிலையில் தான் வி நடிகர் அந்த டபுள் மீனிங் இயக்குநர் மீது கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நம்ம படம் வெளியான பிறகு கூட அந்த படத்தை வெளியிட்டு இருக்கலாமே என கோபித்துக் கொண்டாராம்.

பிசினஸ் படுத்துடுச்சு
சமீபத்தில் அந்த இயக்குநரின் படு மோசமான படம் வெளியான நிலையில், கொஞ்சம் நஞ்சம் இருந்த ஹைப் மற்றும் பிசினஸ் கூட வி நடிகரின் அடுத்த படத்திற்கு இல்லாமல் ஆகிவிட்டதாக கூறுகின்றனர். தொடர்ந்து ஃபிளாப் படங்களை கொடுத்து வரும் நடிகர், அடுத்த படத்தின் ரிசல்ட்டும் இப்பவே தெரிஞ்சிடுச்சே என தலையில் துண்டு போட்டு உட்கார்ந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











