மாஸ் நடிகர் முகத்தில் ஈயே ஆடலையாம்.. நம்ம படத்துக்கும் இப்படி எதிர்பார்ப்பு இருக்குமா என கவலை!
சென்னை: உச்ச நடிகரின் இடத்தை எட்டிப்பிடித்து விட்டோம் என்கிற மமதையில் சுற்றித் திரிந்து வந்த மாஸ் நடிகருக்கு சமீப காலமாக டிக்கெட் புக்கிங் மற்றும் ஓவர்சீஸ் எதிர்பார்ப்பு நிலவரங்கள் குறித்த தகவல்கள் தலைவலியை கொடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
உச்ச நடிகர் படத்தின் அலை சுனாமி போல எழுந்து நிற்கும் நிலையில், அதனை அடக்க ப்ரோமோ எல்லாம் வெளியிட்டும் எந்த பாட்ஷாவும் பலிக்கவில்லை என்பதால் ரொம்பவே அப்செட்டில் அடங்கிப் போயுள்ளாராம் மாஸ் நடிகர்.

சோஷியல் மீடியா டீமை எல்லாம் வைத்து பரப்ப நினைத்த நெகட்டிவிட்டி எல்லாம் பலனளிக்காமல் போக தனது டீமை அழைத்து கண்டபடி போனில் திட்டியதாகவும் பேச்சுக்கள் கசிந்துள்ளன.
முதல் நாள் வசூலே பகல் கனவு: மாஸ் நடிகர் வசூல் மன்னனாக வலம் வந்தாலும், முதல் நாள் வசூலில் இதுவரை டாப் நடிகரிடம் அடிவாங்கியே வருகிறார். இந்நிலையில், உச்ச நடிகரிடமும் இந்த முறை பெரியளவில் அடிவாங்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரொம்பவே அப்செட் ஆக உள்ளாராம்.
கும்பிடு போட்ட இளம் நடிகர்கள்: உச்ச நடிகரின் பவரை பார்த்து மலைத்துப் போன இளம் முன்னணி நடிகர்கள் எல்லாம் உச்ச நடிகர் படத்துக்கு வாழ்த்து சொல்லி அவரது ரசிகர்களின் சாபத்தை பெறாமல் தங்கள் படத்துக்கும் இப்படியொரு சப்போர்ட் வேண்டும் என சரணடைந்து வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக அந்த நடிகரின் ஜெராக்ஸ் காப்பியாக வளர்ந்து வரும் மாஸ் நடிகர் அப்படியே அமைதி காத்து வருவதற்கு பின்னாள் அவருக்கு மிகப்பெரிய மனக்கஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
நமக்கு இதெல்லாம் எப்போ அமையும்: இத்தனை வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்தாலும், நம்ம படம் வரும் போது விடுமுறை விடுவது, மற்ற மாநிலங்களிலும் டிக்கெட் புக்கிங் ஹவுஸ்ஃபுல் ஆவது, ஓவர்சீஸில் இப்படியொரு எதிர்பார்ப்பு எல்லாம் எப்போ தான் கிடைக்கும் என்றே தெரியவில்லையே என சோகத்தில் ஆழ்ந்துள்ளாராம். கண்டிப்பாக தனது அடுத்த படத்தின் மூலம் தனக்கான மைலேஜ் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறாராம் நடிகர். ஆனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு சமீப காலமாக குறைந்து வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் அதற்கான பில்டப் ப்ரமோஷன்களை முடுக்கி விட உத்தரவு போட்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











