பெண்டு நிமித்திய லேடி.. இதுக்கு மேல பாடி தாங்காதுன்னு ஓட்டம் எடுத்த பிரைட் நடிகர்.. அது அவ்ளோதான்?

By Staff

சென்னை: பந்து இயக்குநர் எப்படி பிரைட் நடிகரை நொந்து நூடுல்ஸ் ஆக வைத்தாரோ அதே போல அந்த லேடி இயக்குநரும் பழைய பிரைட் நடிகர் என்கிற நினைப்பில் ஒவ்வொரு காட்சிக்கும் உடலை வருத்தி நடிக்க வைத்திருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் இதெல்லாம் சரிபட்டு வராது என நினைத்த அவர் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க என எஸ்கேப் ஆகி விட்டதாக கூறுகின்றனர்.

தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன் என்கிற பெயரில் அவரை வச்சு காலி பண்ணி வருகிறார் அந்த பிரைட் நடிகர். மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அக்கட தேசம் போன நிலையில், இப்படியெல்லாம் இனிமேலும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டாமே என்கிற முடிவுக்கே அவர் வந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

Popular actor walked out from Lady director due to this reason

பெண்டு நிமித்திய லேடி: இளம் வயதில் கஷ்டப்பட்டு உழைத்தது போல இப்போது நடிகருக்கு முடியவில்லை என்றும் உடம்பில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதால் முகத்தில் மட்டும் எவ்ளோ ரியாக்‌ஷன் வேண்டுமானால் கொடுத்து நடிக்கத் தயார் என்கிறாராம். ஆனால், வாங்க பார்த்து பண்ணிக்கலாம் என அந்த பந்து இயக்குநரை போல அன்பாக பேசி அழைத்த லேடி இயக்குநர் போக போக பெண்டு நிமித்த ஆரம்பித்த நிலையில், பிரைட் நடிகர் காண்டாகி விட்டாராம்.

முடியல ஆத்தா?: ஒரே படத்தில் ரம் நடிகரை போல உடம்பை ஏத்தி இறக்கி எல்லாம் அப்போ நடிச்சது போல இனிமேலும் என்னால் நடிக்க முடியாது என்றும் மேலும், இதே லுக்கில் அந்த மொழியில் ஒரு படத்துக்கு கமிட் ஆகிவிட்டேன். இப்போதைக்கு அதுதான் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால், இன்னும் கொஞ்ச மாசம் கழிச்சு நீங்க கேட்ட மாதிரி மாறி வருகிறேனே என நைசாக பேசி முடியல ஆத்தான்னு சொல்லாமல் சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார் என்கின்றனர்.

கோபத்தில் இயக்குநர்கள்: வரிசையாக தமிழ் சினிமா இயக்குநர்களை இப்படி ஆசை காட்டி பாதியிலேயே மோசம் செய்து விட்டு ஓடி விடுகிறார் அந்த பிரைட் நடிகர் என சில இயக்குநர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களும் நடிகர் மீது செம கோபத்தில் இருப்பதாக கூறுகின்றனர். கைவசம் அரை டஜன் படங்கள் இருக்கும் நிலையில், அதையெல்லாம் விட்டு விட்டு அக்கட தேசத்து படங்கள் மீது ஏன் அதிக கவனம் செலுத்திகிறார் என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X