இரண்டாவது மனைவியும் போரடித்து விட்டதாம்.. புது காதலியை கண்டுபிடிக்க ரியாலிட்டி ஷோ செல்லும் நடிகர்?

By Staff

சென்னை: வில்லனாக சில படங்களில் நடித்து வந்த அந்த நடிகர் ஒரு கட்டத்துக்கு மேல், பட வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், அப்படியே சீரியல் பக்கம் செட்டிலாகி விட்டார்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் அந்த நடிகர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், சில பெண்களுடன் தொடர்பில் இருந்தார் என கிசுகிசுக்கப்பட்டது.

திடீரென தனது 2வது மனைவியை அறிமுகப்படுத்திய அந்த நடிகர் தற்போது அவருடனான வாழ்க்கையும் போரடித்து விட்டதால் ரியாலிட்டி ஷோ பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

Popular actor wants to find third lover in reality show talks shocks kollywood?

வயசானாலும் சபலம் விடல: அந்த சின்னத்திரை நடிகருக்கு வயதானாலும் சபலம் விடாத நிலையில், இளம் வயது பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த வயதிலும், என்னால் முடிகிறது. உங்களால் முடியவில்லை என்றால் சும்மா இருங்க என பேட்டி எல்லாம் கொடுத்து தனது ட்ரோல்களுக்கு எதிராக பொங்கி எழுந்திருந்தார்.

மேலும், இரண்டாவது மனைவியுடன் இஷ்டத்துக்கு எல்லை மீறி ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த அந்த நடிகர் சமீப காலமாக அப்படியே சைலன்ட்டாக மாறிவிட்டது ஏன் என்கிற கேள்வி தற்போது கிளம்பி உள்ளது.

போர் அடித்து விட்டது: முதல் மனைவியை விட்டுப் பிரிந்த நிலையில், அந்த சீரியல் நடிகர் இரண்டாவதாக இளம் பெண் ஒருவரை பேசியே மயக்கி திருமணம் செய்துக் கொண்டாராம்.

Popular actor wants to find third lover in reality show talks shocks kollywood?

கொஞ்ச நாட்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரே அலப்பறையாக இருந்து வந்த அவர்களது இரண்டாம் திருமண வாழ்க்கை தற்போது போரடித்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சீரியல்களிலும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில், என்ன செய்வது என யோசித்த நடிகருக்கு சூப்பரான ஜாக்பாட் வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த ரியாலிட்டி ஷோவில்: சர்ச்சைக்கு பெயர் போன அந்த ரியாலிட்டி ஷோவில் சின்னத்திரை நடிகர் கலந்து கொள்ள வாய்ப்பு தேடி வந்துள்ளதாகவும், இதனால், புதிதாக திருமணம் செய்துக் கொண்ட மனைவியை விட்டு பிரிந்து வரவே அந்த நடிகர் முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதே மூன்றாவதாக ஒருவரை உஷார் பண்ணத்தான் என்கிற பேச்சுக்கள் தற்போது பகீரை கிளப்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X