அவன் காமெடியை இதோட கட் பண்ணுங்க.. இயக்குநருடன் மல்லுக்கட்டிய ஹைட் நடிகர்.. அசிங்கமாகிடுச்சே!
சென்னை: ஹைட் நடிகர் செய்து வரும் கூத்துகளை பார்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து வரும் நிலையில், பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்த காமெடி நடிகருக்கும் சிரிப்பு வரும் தானே. ஆனால், அது வீடியோவாக வெளியாகி பெரியளவில் நடிகரை அசிங்கப்படுத்தி விட்டது. இதனால் காமெடி நடிகர் மீது செம காண்டில் ஹைட் நடிகர் இருந்து வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
பிராங்க் வீடியோ பண்றேன் என நினைத்து நடிகர் பண்ண எந்தவொரு வீடியோவும் தீயாக பரவாத நிலையில், நடிகரின் செயலை பார்த்து காமெடி நடிகர் கொடுத்த ரியாக்ஷன் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி விட்டது. இதனால், சந்தோஷப்பட முடியாமல் நடிகர் ரொம்பவே கடுப்பாகி விட்டாராம்.

நக்கல் ஜாஸ்தி: சும்மாவே அந்த காமெடி நடிகருக்கு நக்கல் அதிகம் தான் என சினிமா பிரபலங்களே சொல்லி வருகின்றனர். இந்நிலையில், ஹைட் நடிகர் படத்தில் நடித்து வரும் காமெடி நடிகர் ரொம்பவே கன்ட்ரோல் பண்ணி சிரிப்பை அடக்க முடியாமல் செய்த விஷயம் வீடியோவில் மாட்டிக்கிட்ட பங்கு போல வச்சு செய்யும் என நடிகரே நினைக்கவில்லையாம்.
கடுப்பான நடிகர்: காமெடி நடிகரின் ரியாக்ஷனை பார்த்து சோஷியல் மீடியாவில் மட்டுமின்றி அந்த நடிகரின் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோயின் முதல் டச்சப் பாய் வரை பலரும் பார்த்து சிரிக்க ஆரம்பித்ததை ஹைட் நடிகரே நேரடியாக பார்த்த நிலையில், அப்செட் ஆகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடிகரை எப்படி சந்திப்பது என காமெடி நடிகர் யோசித்துக் கொண்டிருக்கையில் காமெடி நடிகர் மீது செம காண்டில் நடிகர் இருப்பதாக கூறுகின்றனர்.
இயக்குநரிடம் வாக்குவாதம்: படத்தில் இருந்தே அந்த காமெடி நடிகரை உடனடியாக தூக்கிடுங்க என இயக்குநரிடமே நடிகர் கோரிக்கை வைத்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், பாதி படத்திற்கு மேல் நடிகர் நடித்து விட்டார் என இயக்குநர் எடுத்துச் சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
4 நாள் கண்ணுல படக்கூடாது: நடிகரின் நண்பர்களும் நடிகரை தேற்றிய நிலையில், 4 நாளாவது அந்த நடிகரை செட்டில் பார்க்கவே கூடாது என கண்டிஷனாக சொல்லி விட்டார் எனக் கூறுகின்றனர். அந்த காமெடி நடிகர் காதை இயக்குநர் கடிக்க, நல்லதா போச்சு என நினைத்த நடிகர் ஜாலியாக இன்னொரு படத்துக்கு 4 நாள் கால்ஷீட்டை கொடுத்து நடித்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகருக்கு மெசேஜில் வருத்தமும் நடிகர் தெரிவித்து விட்டதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











