Don't Miss!
- News
எகிறும் தொற்று.. இதுவரை 6,362,197 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலி.. 555,013,578 பேர் பாதிப்பு
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சர்வதேச அளவில் காத்துவாங்கிய மானம்.. பயங்கர அப்செட்டில் மாஸ் நடிகர்.. இயக்குநருக்கு எச்சரிக்கை!
சென்னை: மாஸ் நடிகரின் அந்த ஆக்ஷன் காமெடி படம் தியேட்டரில் வெளியாகி பலத்த அடி வாங்கியது. அப்போது கூட அந்த அளவுக்கு அசிங்கமாகவில்லை.
அந்த சர்வதேச ஓடிடியில் சமீபத்தில் வெளியான அந்த படத்தை பார்த்து பல வெளிநாட்டினரும் பிபி வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சில எக்ஸ்பர்ட்ஸ் படத்தை வச்சு செய்த நிலையில், மீண்டும் காத்து வாங்கும் மானத்தால் மாஸ் நடிகர் பயங்கர கடுப்பாகி அந்த படத்தை இயக்கிய இயக்குநருக்கு ஒரு வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமானாலும்
ஒரு
லாஜிக்
வேணாமா...பீஸ்ட்
படத்தை
கலாய்த்த
விமானப்படை
அதிகாரிகள்

லாஜிக் எத்தனை கிலோ
கோலிவுட் படங்கள் மட்டுமின்றி பல ஹாலிவுட் படங்களே லாஜிக் எத்தனை கிலோ என்கிற ரீதியில் தான் சினிமாவை உருவாக்கி வருகின்றனர். ஆனாலும், சினிமா லிபர்டியையும் தாண்டி சில படத்தின் காட்சிகள் எல்லை மீறும் போது தான் இப்படி நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கு உள்ளாகி அசிங்கப்படுகின்றன.

இஷ்டத்துக்கு
இளம் இயக்குநர்கள் சரியான பயிற்சி இல்லாமல், பெரிய நடிகரின் பட வாய்ப்புகள் கிடைத்ததும் அவர்களை ஏமாற்றும் ரீதியில் இஷ்டத்துக்கு கதை சொல்லி அதை படமாக்கி காட்டுகிறேன் என களத்தில் இறங்கி, அந்த பெரிய நடிகர்கள் பல ஆண்டுகள் சேர்த்து வைத்த பெயரையும் பிராண்டையும் ஒரே ஒரு படத்தின் மூலம் காலி செய்து விடுகின்றனர். மாஸ் நடிகருக்கும் சமீபத்தில் அப்படியொரு நிலை தான் ஏற்பட்டுள்ளது.

ஓவர் பில்டப்
சாதாரண படங்களை இயக்குவது போல ஆரம்பித்து, மாஸ் காட்டுகிறேன் என சூப்பர் ஹீரோ படங்களையே மிஞ்சும் அளவுக்கு காட்சிகளை வைத்து கடுப்பேற்றி விடுகின்றனர். தியேட்டரில் லேசாக அடிவாங்கிய அந்த படம் ஓடிடியில் வெளியாகி சர்வதேச சினிமா ரசிகர்களிடம் மரண அடி வாங்கி வருகிறது.

மானம் போச்சு
இப்படி எந்தவொரு பேசிக் அறிவும் இல்லாமல் எப்படி அந்த காட்சியை இயக்குநர் எடுத்தார் என்றும், அந்த பெரிய நடிகர் அதில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்றும் ஏகப்பட்ட கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளதால் மாஸ் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். மேலும், இயக்குநரை மீண்டும் அழைத்து அவருக்கு வார்னிங் ஒன்று கொடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இயக்குநருக்கு வார்னிங்
என் படத்தோட கதையை விட்டுடுங்க, எந்தளவுக்கு தரமான சம்பவம் பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க, அடுத்து பண்ணப் போறது உச்ச நடிகரின் படம், அதையாவது ஒழுங்கா எல்லாத்தையும் கத்துக்கிட்டு சரியா பண்ணுங்க.. இந்த வாய்ப்பையும் மிஸ் பண்ணிட்டீங்கன்னா அடுத்து சினிமாவில் இருந்து காணாமல் போய்டுவீங்க என அட்வைஸ் கொடுப்பது போல வார்னிங் கொடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

உச்ச நடிகர் யோசனை
எல்லாம் ஒப்பந்தம் ஆகிடுச்சு, இந்நிலையில், பின் வாங்கினால் நல்லா இருக்காது என நினைத்த உச்ச நடிகர் இயக்குநர் சொன்ன கதையை அலசி ஆராய தனது நண்பர் இயக்குநரை அழைத்து அவரிடம் மொத்த கதையையும் சொல்லி திருத்த சொல்லி இருப்பதகவும் தகவல்கள் கசிந்துள்ளன மேலும், அந்த இயக்குநரை பேருக்கு வைத்து விட்டு வேறு ஒருவரை வைத்து இயக்கி விடலாமா? என்கிற யோசனையிலும் உச்ச நடிகர் இருப்பதாக கூறுகின்றனர்.