தண்டத்துக்கு வீட்டில் உட்கார்ந்திருக்கும் வி நடிகர்.. நம்பி ஏமாந்துப்போன இயக்குநர்.. பலபேர் நிலைமை?
சென்னை: ஒரு பக்கம் புதுமுக இயக்குநர்கள் எல்லாம் தாங்களே ஹீரோவாக நடித்து ரசிகர்களை நல்ல கதைகளால் ஈர்த்து ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்று எங்கேயோ சென்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சில டாப் ஹீரோக்கள் சரியான படங்களை கொடுக்க முடியாமல் தங்களின் ரசிகர்களை தொடர்ந்து காயப்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல், பெருமளவில் இழந்தும் வருகின்றனர்.
பிரபலமான வி நடிகர் ஒரு காலத்தில் மாஸ் நடிகர், டாப் நடிகரை எல்லாம் ஓடவிட்டு முன்னிலையில் இருந்தார். ஆனால், கடந்த சில காலமாக அவருக்கு ஏழரை சனியா என்னவென்று தெரியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாராம்.

அவர் நம்பி களமிறங்கும் படங்களும் தொடர்ந்து ரிலீஸ் சிக்கல் உள்ளிட்ட பஞ்சாயத்துக்களில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமின்றி வெளியானாலும் ஃப்ளாப் ஆகிவிடுவது தான் நடிகரை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
ஒரு பக்கம் பிஸி: சில நடிகர்கள் ஒரு பக்கம் ரொம்பவே பிஸியாக இயக்குநர்களை வரிசையாக ஹவுஸ் அரெஸ்ட் செய்வது போல லாக் செய்து வைத்து ஒவ்வொரு படத்தை முடித்து விட்டு அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுக்க முயற்சி செய்து வருகின்றன்ர். ஆனால், நல்ல நல்ல இயக்குநர்களை எல்லாம் மிஸ் செய்துவிட்டு புதிய டைரக்டர்களையும் சொதப்பல் இயக்குநர்களையும் நம்பி படங்களில் நடிக்க இன்னமும் அந்த நடிகர் ஏன் தான் முயற்சித்து வருகிறார் என்கிற கேள்வியை ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.
டயார்ட் ஆகிட்டாரா?: கஷ்டமான கதாபாத்திரங்களில் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தமிழ் சினிமா ரசிகர்கள் தராத நிலையில், அவரே டயார்ட்டாக ஆகிவிட்டாரா? அதனால் தான் வீட்டில் பல வருடங்களாக ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்து விட்டாரா என கிண்டல் செய்து வருகின்றனர். மற்ற நடிகர்களாவது வேறு துறையை நோக்கி நகர்ந்துச் செல்லும் நிலையில் இவர் ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ணுகிறார் என அவரது ரசிகர்களே புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
அடுத்த படமும் போச்சு: இந்நிலையில், நடிகர் சமீபத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னர் பில்டப் விட்ட நிலையில், அந்த படமும் தற்போது ஆரம்பிக்கப் போவது கிடையாது என்றும் டைரக்டருடன் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான பிரச்னை காரணமாக அந்த படமும் டிராப் என்கின்றனர். இதற்கு அடுத்து அந்த நடிகர் அடுத்த இயக்குநரை தேடிச் சென்று கதை கேட்டு அடுத்த படத்தின் ஷூட்டிங் எப்போ தொடங்கி படம் எப்போ தியேட்டருக்கு வரும் என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது.


Click it and Unblock the Notifications