நடிகையுடன் நெருக்கம்.. சந்தேகப்பட்ட மனைவி.. பஞ்சாயத்துக்கு போன இடத்தில் பஞ்சரான நடிகர்!

By Staff

சென்னை: பிரபல நடிகருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

சினிமாவில் நடிக்கும் சக நடிகை ஒருவருடன் ரொம்பவே நெருக்கம் காட்டி வருகிறாராம் அந்த நடிகர்.

இருவருக்கும் இடையே ஏதோ கனெக்‌ஷன் இருக்கு என நினைத்து மனைவி சந்தேகப்பட்டு பேசியதால் தான் இப்படியொரு பிரச்சனையே எழுந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

படங்கள் ஓடுவதில்லை

படங்கள் ஓடுவதில்லை

ஆரம்பத்தில் வித்தியாசமாக நடிக்கிறார் என ஒரு சில படங்கள் நடிகருக்கு க்ளிக் ஆன நிலையில், தொடர்ந்து அப்படியே அரைத்த மாவையே நடிகர் அரைக்க ஆரம்பித்த நிலையில், எந்தவொரு படமும் ஓடுவதில்லை. ஆனாலும், 3 மாசத்துக்கு ஒரு புதிய படத்தை ஆரம்பித்து புதிய புதிய நடிகைகளுடன் நடித்து வருகிறார் அந்த நடிகர்.

ரிலீஸ் ஆவதில்லை

ரிலீஸ் ஆவதில்லை

ரிலீஸ் ஆகாமல் அந்த நடிகர் நடிப்பில் அரை டஜன் படங்கள் கிடப்பில் கிடந்தாலும், அடுத்தடுத்த படங்களை ஆரம்பித்து எப்படி இருந்தாலும், பெரிய ஹீரோவாக ஆகி விட வேண்டும் என்கிற முயற்சியை விடாமல் கடைபிடித்து வருகிறார். ஆனால், நடித்த படங்கள் எல்லாம் ரிலீஸாகி நன்றாக ஓடினால் தானே அவரது கனவு பலிக்கும் என்கின்றனர்.

நடிகையுடன் நெருக்கம்

நடிகையுடன் நெருக்கம்

திருமணமாகி விட்ட நிலையில், சினிமா ஷூட்டிங்கிற்கு எப்போதுமே மனைவி கூடவே வந்து விடுவார் அல்லது, நடிகரை வேவு பார்க்க ஆட்களை உதவி இயக்குநர்களாகவோ, புரொடக்‌ஷன் பாய்களாகவோ போட்டிருப்பார். இந்நிலையில், நடிகை ஒருவருடன் ரொம்பவே அவர் நெருக்கம் காட்டி வருகிறார் என ஸ்பை வெளியிட்ட தகவல் தான் பிரச்சனை வெடிக்க காரணம் என்கின்றனர்.

சந்தேகம் கொண்ட மனைவி

சந்தேகம் கொண்ட மனைவி

புதிதாக நடிகர் நடித்து வரும் படம் கிராமப்புறங்களில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோயின் உடன் நடிகர் ரொம்பவே நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் சென்ற நிலையில், தனது சந்தேகத்தை நடிகருடன் வெளிப்படையாகவே கேட்டு விட இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்து விட்டதாம்.

பஞ்சாயத்தில் பஞ்சர்

பஞ்சாயத்தில் பஞ்சர்

நடிகருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சந்தேக பிரச்சனையை சரி செய்து வைக்க சில குடும்பத்து பெரியவர்களிடம் பஞ்சாயத்துக்கு போக அவர்கள் குடும்பத்தில் கும்மியடிப்பது போல செய்த விஷயங்களால் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார். கடைசியாக மனைவியிடமே சரண் அடைந்து, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, யாரோ தப்பா சொல்லி இருக்காங்க என பேசி பிரச்சனையை சரி செய்துள்ளாராம். ஆனால், இன்னமும் மனைவிக்கு அந்த நடிகர் மீதான சந்தேக கண் போகவில்லை என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X