ஒருத்தருக்கு படம் லீக்.. ஒருத்தருக்கு முதல் ஃப்ளாப்.. பார்ட்டி வைத்துக் கொண்டாடிய நடிகரின் மனைவி?

By Staff

சென்னை: சினிமாவில் சக்சஸ் பார்ட்டிகளை விட அடுத்தவர்கள் ஃபெயிலியர் ஆகும் போது சிலர் சந்தோஷத்தில் வைக்கும் பார்ட்டிகளே கோடம்பாக்கத்தில் அதிகம் என அதிர்ச்சியை கிளப்பும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே மாஸ் நடிகர் உள்ளிட்டோர் இதுபோன்ற பார்ட்டிகளை தங்களின் ஆப்போசிட் போட்டியாளர்கள் தோல்வியடையும் போது வைத்துக் கொண்டாடியதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில், பிரபல நடிகரின் மனைவி ரொம்பவே ஹேப்பியாக பார்ட்டி ஒன்றை நடத்தினார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Popular Actor Wife gives drinks party for Competitors Movie got leaked and Flopped
Photo Credit:

கணவரை விட திடீரெனெ வந்து ஜெட் ஸ்பீடில் வளர்ந்து வரும் நடிகரை பார்த்து ஏற்கனவே செம டென்ஷனில் இருந்த நடிகரின் மனைவி தற்போது அவரது படம் படுத்தே விட்டது என்கிற இன்ப செய்தியை கேட்டு பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார் என திடுக்கிட வைக்கின்றனர்.

அந்த படம் லீக்: மாஸ் நடிகர் எத்தனை பேர் படம் ஃப்ளாப் ஆனதுக்கு பார்ட்டி வைத்துக் கொண்டாடியிருப்பார். இப்போ அவரோட படம் லீக் ஆனதுக்கு நான் பார்ட்டி பண்றேன் பாருங்க என நடிகரின் மனைவி சில லட்சங்களை செலவு செய்து சொகுசு பாரில் தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அவர் செம ஹேப்பியாக உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

பார்ட்டி வைத்த மனைவி: தொடர்ந்து ஹிட் மேல ஹிட்டுக் கொடுத்து வந்த நடிகர் நடிக்க வந்ததில் இருந்தே இவன்லாம் ஒரு ஆளா என்றும் எப்படியும் கொஞ்ச நாளிலேயே பல்பு வாங்கப் போறான் என காத்திருந்த நடிகரின் மனைவி ஒல்லி நடிகர் படம் ஊத்திக்கொண்ட நிலையில், டபுள் டமாக்கா எனச் சொல்லி இரண்டு தோல்விகளையும் சந்தோஷமாக சரக்கு பார்ட்டி வைத்து மஜா பண்ணிவிட்டார் என்று கூறுகின்றனர்.

இனிமே என் புருஷன் தான்: கோலிவுட்டில் இனிமேல் என் புருஷன் தான் கொடிகட்டி பறக்கப் போகிறார் என்றும் அவர் தோற்கும் போதெல்லாம் சிரித்தவர்கள் இன்று கர்மாவின் வினையால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என மனைவி குடித்து விட்டு ஓவர் ஆட்டம் போட்டுள்ளார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. சினிமாவில் சிலர் இப்படியும் உள்ளனர் என்றும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X