மோசம்.. இளம் நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல நடிகர்.. மனைவிக்கு தெரிஞ்சுப்போச்சாம்?

By Staff

சென்னை: கோலிவுட்டுக்கு சமீபத்தில் நடிக்க வந்த அந்த இளம் நடிகை தற்போது முழுமையாக அந்த பிரபல நடிகரின் கன்ட்ரோலில் தான் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. பார்க்க விவரமே தெரியாதவர் போல அந்த நடிகை இருப்பதை போல முகத்தை வைத்துக் கொண்டே ஏகப்பட்ட கில்லாடி வேலைகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறாராம்.

ஆனால், சமீப காலமாக நடிகையை பெரிதும் வெளியே பார்க்க முடியவில்லை என்றும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவிடுவதை கூட நடிகை தவிர்த்து வரக் காரணமே அந்த நடிகர் தான் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

gossip kollywood actress gossip

நடிகரின் முழு கட்டுப்பாட்டுக்குள் நடிகை அரெஸ்ட் ஆகி கிடக்கும் விஷயம் சமீபத்தில் நடிகரின் மனைவிக்கும் தெரிந்து விட பெரிய பஞ்சாயத்தே வெடித்து விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

இளம் நடிகை: பக்கத்து ஸ்டேட்டில் இருந்து பார்சலாகி வந்த அந்த இளம் நடிகைக்கு ஆரம்பத்திலேயே பெரிய ஜாக்பாட் அடித்தது. அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க ஆரம்பித்த நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகின்றன. பிரபல நடிகர் நடிப்பில் வெளியான சில படங்களில் செம ஜோடியாக சேர்ந்து நடித்து அந்த ப்ரியமான நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இருவரும் பர்ஃபெக்ட் ஜோடி என்றே ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட ஆரம்பித்தனர். இந்நிலையில், அந்த டாப் ஹீரோவின் பார்வை நடிகை மீது பட்டு விட்டதாம்.

பிரபல நடிகரின் பார்வை: உடனடியாக தனது புது படத்தில் நடிகையை கமிட் செய்த அந்த பிரபல நடிகர் சமீப காலமாக நடிகையை டோட்டலாக தனது கன்ட்ரோலிலேயே வைத்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பி வருகின்றன. நடிகையையும் முன்பு போல சகஜமாக வெளியே எங்கேயும் தென்படாமல் கூண்டுக்கிளியாக மாறிவிட்டார் எனக் கூறுகின்றனர்.

பிரபலத்தின் கட்டுப்பாட்டில்: ஹீரோக்களை போல இல்லாமல் நடிகைகள் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவார்கள். ஆனால், தற்போது அந்த பிரபல நடிகர் படத்தில் கமிட் ஆகி உள்ள அந்த நடிகை வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்பது தான் ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரபலத்தின் மூலம் நடிகைக்கு பெரிய பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், அவரும் பொட்டிப் பாம்பாக நடிகரின் மகுடிக்கு ஏற்ப ஆடி வருவதாக கூறுகின்றனர்.

மனைவிக்கு தெரிஞ்சுப்போச்சாம்: திடீரென இந்த இளம் நடிகைக்கு ஏகப்பட்ட செளகரியங்களை தனது கணவர் ஏன் செய்து வருகிறார் என்கிற கேள்விகள் மனைவிக்கு சந்தேக கண்ணை திறந்து விட நடிகை தனது கணவர் கட்டுப்பாட்டில் தான் தற்போது இருக்கிறார் என்பதை புரிந்துக் கொண்டு மனைவி கடுப்பாகி உள்ளார் என்றும் கூறுகின்றனர். சீக்கிரமே இது பெரிய விஷயமாக வெடிக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி விட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X