பிரைட் நடிகரை விட அவர் மனைவி தான் செம ஹேப்பியாம்.. இந்த முறை தமாஸ் நடிகருக்கு செம பல்பு!
சென்னை: பிரைட் நடிகர் அந்த வரலாற்று காவியத்தை விட்டு விட்டு கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்றும் அவர் தவறான முடிவை எடுத்து விட்டார் என தொடர்ந்து தமாஸ் நடிகர் ட்ரோல் செய்து வந்த நிலையில், படத்தின் ரிசல்ட்டை பார்த்து பிரைட் நடிகரை விட அவரது மனைவி தான் பார்ட்டி வைத்தே கொண்டாடி விட்டார் என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
முன்னதாக அந்த நடிகரின் படத்தை ரொம்பவே பாராட்டி நடிகருக்கு வாழ்த்துக்கள் எல்லாம் கூறிய நடிகரின் மனைவி இந்த படத்தை அவர் தொட்டதில் இருந்தே செம கடுப்பில் இருந்தாராம். இந்நிலையில், சரியான ரிசல்ட் வந்துடுச்சு என குஷியில் துள்ளிக் குதித்து விட்டாராம்.

மேலும், தனது கணவருக்கு எதிராக கம்பு சுத்தின மாஸ் நடிகரும் கஷ்டப்படுவதை பார்த்தும் அவர் செம ஜாலியாக உள்ளார் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி விட்டனர்.
அன்றே கணித்த பிரைட் நடிகர்: சில படங்கள் எல்லாம் தனக்கு செட்டாகாது என முன்பே கணித்து விடும் ஆற்றல் அந்த பிரைட் நடிகருக்கு அதிகமாகவே உள்ளது என்கின்றனர். ஆனால், என்ன ஒரே ஒரு குறை என்றால், அதனை தொடர்ந்து அவர் தேர்வு செய்யும் படமும் சரியாக ஓடாது என்று தெரிந்தாலும், வேறு வழியில்லாமல் தேர்வு செய்து நடித்து வருகிறார் என கலாய்த்து வருகின்றனர்.
குட்டி வாரிசுக்கு பேக் டு பேக் அடி: ஒல்லி நடிகரை வைத்து எடுத்த படம் சரியாக வேகாத நிலையில், புரட்சி பொங்கலையாவது தமாஸ் நடிகரை வைத்து ஓட்டி விடலாம் என நினைத்த குட்டி வாரிசுக்கு 2வது முறையும் தலையில் இடி விழுந்தது தான் மிச்சம் என்கின்றனர். எப்படியாவது பில்டப் செய்து படத்தை தேற்றி விட நினைத்தாலும், தியேட்டர் ஓனர்கள் இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது பாஸ் என கை விரித்து விட்டார்களாம். அந்த தியேட்டர் பிரபலம் ஒரு வாரத்துக்கு யாரும் பேட்டி கேட்டு கிட்ட வராதீங்க என ஊர் பக்கமே போய் விட்டாராம்.

பிரைட் நடிகரின் மனைவி ஹேப்பி: இந்த படத்தை பிரைட் நடிகர் மிஸ் பண்ணது அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என அட்வைஸ் பண்ணிக்கொண்டு இருந்த அனைவரும் இப்போ, நல்லவேளை தப்பிச்சிட்டீங்க பாஸ் என்று சொல்வதை கேட்டே பிரைட் நடிகரின் மனைவி ரொம்பவே ஹேப்பியாகி விட்டார் என்கின்றனர். சும்மாவாச்சம் ஒரு போன் பண்ணி வாழ்த்து சொல்லட்டா என நடிகரிடம் வேற நக்கல் செய்து பேசி சிரித்ததாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











