மீண்டும் ஒட்டப் பார்க்கும் மில்க் பியூட்டி..துடைப்பக்கட்டையை திருப்பும் ஹீரோவின் மனைவி.. என்ன ஆச்சு?
சென்னை: பிரம்மாண்ட படத்தில் நடித்த அந்த வாரிசு நடிகருக்கு கைவசம் பல பெரிய படங்கள் குவிந்து வருகின்றன. உச்ச நடிகருடன் ஜோடி போட்டு நடித்து வரும் மில்க் பியூட்டி மீண்டும் அந்த வாரிசு நடிகருடன் ஒட்டப் பார்ப்பதாக ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆரம்பத்தில் அந்த மில்க் பியூட்டி நடிகையுடன் சில படங்களில் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வெற்றிகளை அடைந்து முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்தார் அந்த வாரிசு நடிகர்.
இருவரும் ஒரு கட்டத்தில் காதலித்து வந்ததாகும் ஆனால், அதற்கு அந்த நடிகரின் அப்பா சம்மதம் தெரிவிக்காமல் வேறு ஒரு பெண்ணை அவசர அவசரமாக திருமணம் முடித்தது பரபரப்பை கிளப்பியது.

மில்க் பியூட்டியுடன் மிங்கிள்: சினிமாவில் ஹீரோவாக ஆன நிலையில், மில்க் பியூட்டியுடன் இணைந்து சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அந்த வாரிசு நடிகர் தனது அண்ணனை போலவே தானும் நடிகையை காதலித்து திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிற கனவுகளுடன் ஏகப்பட்ட சேட்டைகளை செய்து வந்தாராம்.
ஆனால், குடும்பத்தில் அவரது காதலுக்கு அனுமதி கிடைக்காத நிலையில், அந்த நடிகையை பிரிந்து விட்டு இன்னொரு திருமணத்தை செய்துக் கொண்டார் அந்த செல்லப்பிள்ளை என அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.
அண்ணனை விட சூப்பராக: சினிமாவில் அண்ணன் பல ஆண்டுகள் நடிக்கவே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல இயக்குநர்களை தேர்வு செய்து நடிப்பை பழகிக் கொண்டு டாப் நடிகராக வலம் வரும் நிலையில், அவருக்கு பின்னாடி சினிமாவுக்குள் வந்த தம்பி நடிகரோ கடகடவென நல்ல படங்களில் நடித்து அண்ணனை விட சூப்பர் நடிகராக சினிமாவில் வலம் வருகிறார்.
சமீபத்தில் வாரிசு நடிகர் நடிப்பில் வெளியான அந்த பிரம்மாண்ட படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், மீண்டும் அவருடன் மிங்கிளாக மில்க் பியூட்டி திட்டம் போட்டு வருவதாக ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கம்பேக் கொடுக்க காத்திருக்கும் மில்க் பியூட்டி: பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தவித்துக் கொண்டிருந்த அந்த மில்க் பியூட்டி உச்ச நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், கம்பேக் கொடுக்க இதுதான் சரியான நேரம் என நினைத்து அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களை பிடிக்க முடிவு செய்து வருகிறாராம்.
அப்படித்தான் தனது முன்னாள் காதலருடன் மீண்டும் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடிக்கலாம் என்கிற ஆசையுடன் மில்க் பியூட்டி அந்த நடிகரை சந்தித்து சமீபத்தில் பேசி உள்ளாராம்.
மீண்டும் மில்க் பியூட்டியுடன் நடிப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும் தாராளமாக படம் பண்ணலாம் என வாரிசு நடிகர் க்ரீன் சிக்னல் கொடுக்க அவருடன் இருந்த சில ஸ்பைகள் இந்த விஷயத்தை நடிகரின் மனைவியின் காதுகளுக்கு கொண்டு சென்று விட்டனராம்.

துடைப்பக்கட்டையை திருப்பிய மனைவி: உச்ச நடிகருக்கு ஜோடியான நடிகையுடன் உடனே நடித்தால் நல்லா இருக்குமே என்கிற எண்ணத்தில் தான் அவருடன் இணைந்து நடிக்கலாமா என்கிற பேச்சுவார்த்தையில் மட்டுமே ஈடுபட்டேன் என மனைவிக்கு விஷயம் தெரிந்ததும் சொல்லி சமாதானப்படுத்த நடிகர் முயற்சி செய்துள்ளாராம்.
ஆனால், வேறு எந்த நடிகையுடனாவது நடிங்க, அந்த நடிகை மட்டும் வேண்டாம் என மனைவி ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டு விட்டதாகவும் இதனால் நடிகர் சற்றே அப்செட்டில் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











