புருஷன் கூட நடிக்க எக்கச்சக்க பிட்டு போடும் மனைவி.. அதுக்குத்தான் அப்படியொரு ஐஸ் வச்சாராம்?

By Staff

சென்னை: தனது கணவர் மட்டுமே தரமான நடிகர் என்றும் நடிகைகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பவர் என அந்த மனைவி நடிகை பிட்டு போட பெரிய காரணம் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

கணவர் அசிங்கப்படக் கூடாதே என்று மாஸ் நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பையும் மனைவி விட்டுக் கொடுத்த நிலையில், தன்னை விட்டு விட்டு இளம் நடிகைகளுடனும் பிகினி புயல்களுடன் கணவர் நடித்து வருவது மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.

Popular actor wife tries to pair with her husband soon?

ஒரு காலத்துல அப்டி: அத்தனை ஹீரோக்களுடனும் படுகவர்ச்சியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் உச்சிக் கொட்ட வைத்து வந்த அந்த பப்ளி நடிகை பிரைட் நடிகரை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு பெரிய பிரேக் கொடுத்தார். ஆனால், ஆடிய காலும் மேக்கப் போட்ட மூஞ்சும் சும்மா இருக்காதே என்பது போல மீண்டும் கணவரை தாஜா பண்ணி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

வயதானவர்களுக்கு ஜோடி: ஆனால், முன்பு போல யங் ஹீரோக்களுடனும் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்காமல் வயதான ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வருகிறார். ஹீரோயினாக இல்லாமல் கதையின் நாயகியாக நடித்து வரும் அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் தனது கணவரை புகழ்ந்து தள்ளி பேசியிருந்தார்.

கிட்ட சேர்க்காத நடிகர்: மீண்டும் மனைவி ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த பிரைட் நடிகர் மனைவியுடன் பழையபடி இணைந்து நடித்தால் தனது மார்க்கெட் காலியாகிவிடும் என்பதால் கிட்டவே சேர்க்காமல் உன் ரூட்டை நீ பார்த்துக்க, என் ரூட்டில் தலையிடாத என்றே சொல்லி விட்டாராம்.

வாய்ப்பு தருவாரா?: இந்நிலையில், தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நடிகர் என் புருஷன் என புகழ்ந்து பேசி, பெண்களை மையப்படுத்திய படங்களில் நடித்து வரும் தனக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறைமுகமாக கணவர் புரிந்துக் கொள்ள பேசியிருக்கிறாராம். அடுத்த படத்திலாவது மனைவிக்கு ஒரு சான்ஸ் கொடுப்பாரா அந்த பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என சினிமா வட்டாரத்தில் பலரும் கேலி செய்து பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X