பல குழந்தைக்கு அப்பாவான நடிகர்.. இளம் நடிகையுடன் மும்பையில் நைட் பார்ட்டி.. காதல் வைபோகமா?
சென்னை: சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும் கள்ளக் காதல் விவகாரங்களில் சிக்காத பிரபலங்களே இந்திய சினிமாவில் அதிகம் இல்லை என்று சொல்லும் அளவுக்குத்தான் அவர்களுடைய செல்ஃப் கன்ட்ரோல் உள்ளது.
ரசிகைகள் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது, ஹீரோயின்களுடன் உடலை ஒட்டி லிப் லாக் அடித்து நடிப்பது என்று செல்லும் போது நடிகர்களுக்கும் அடுத்த அடுத்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்கிற ஆசை முளைத்து விடுகிறது.

சில நடிகர்கள் இந்த பெண் மோகத்தால் அழிந்து போன வரலாறுகளையும் பார்த்திருக்கிறோம். இந்நிலையில், திருமணமாகி பல குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அழகான மனைவி இருந்தும்: அன்பாக பார்த்துக் கொள்ள அழகான மனைவி இருந்தும் பல குழந்தைகள் வரை நடிகரின் வாரிசு வேட்கைக்காக பெத்துக் கொடுத்த பின்னரும் இப்படியொரு துரோகத்தை எப்படித்தான் அந்த நடிகரின் மனைவி சகித்துக் கொள்வார் என நடிகரின் தோழி ஒருவரே பேசியிருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. நடிகருக்கு மேலும், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஆசையா? அதற்கு மனைவி சம்மதிக்காததால் நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருக்காரா என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகையுடன் நைட் பார்ட்டி: லோக்கலில் செய்தால் மனைவியிடமோ அல்லது மீடியாவிடமோ மாட்டிக் கொள்வோம் என நினைத்து ரொம்ப உஷாராக மும்பையில் நடிகையுடன் நைட் பார்ட்டிக்கு அந்த நடிகர் சென்றுள்ளார் என்றும் ஆனால், அப்படியிருந்தும் அவரை பற்றிய ரகசியங்கள் அம்பலமாகி இருப்பது தான் பரபரப்பை பற்ற வைத்துள்ளது என்கின்றனர்.
எல்லாமே வதந்தி: ஒரு பக்கம் நடிகர் இளம் நடிகையுடன் காதலில் உள்ளார் என்றும் கூடிய சீக்கிரமே மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அந்த நடிகையை திருமணம் செய்துக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என பேசப்பட்டு வரும் நிலையில், இது முற்றிலும் நடிகரின் வளர்ச்சியை தடுக்கும் செயல் தான் என்றும் நடிகருடன் இணைந்து நடித்து வரும் நடிகை வைத்த பார்ட்டிக்கு நடிகர் அழைப்பின் பேரில் சென்று வந்த நிலையில், இப்படியொரு மோசமான வதந்தி வைரஸ் போல பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications