For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உச்சகட்ட பயத்தில் இருக்கிறாரா மாஸ் நடிகர்.. முதல் நாளே வசூலை பார்த்தால் தான் உண்டு போல.. என்ன ஆச்சு?

  By Staff
  |

  சென்னை: இந்த ஆண்டு வெளியான படம் மாஸ் நடிகரின் இமேஜை டோட்டலாக காலி செய்த நிலையில், அடுத்த ஆண்டு ரிலீஸாக உள்ள அந்த படம் என்ன ஆகப் போகிறதோ என்கிற பயம் நடிகருக்கு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளதாம்.

  அடிக்கடி ரசிகர்களை கூப்பிட்டு விருந்து வைப்பதும், எப்படியாவது படத்தை ஓட வைத்து விடுங்க என்கிற முடிவுக்கு வந்து ரகசிய கூட்டங்களையும் நடத்தி வருகிறாராம்.

  படத்தின் மீது நம்பிக்கை இருந்தால், ஆட்டோமேடிக்காக அதிக தியேட்டர்கள் கிடைத்து விடப் போகுது. ஆனால், ஏன் இந்த பதற்றம் என விசாரித்தால் ஏகப்பட்ட கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

   ஜெயிலர் படத்தில் ரஜினியின் கேரக்டர் இதுதானா...? இன்று மாலை காத்திருக்கும் மாஸ் அப்டேட்! ஜெயிலர் படத்தில் ரஜினியின் கேரக்டர் இதுதானா...? இன்று மாலை காத்திருக்கும் மாஸ் அப்டேட்!

  மாஸ் நடிகர் ஏமாற்றம்

  மாஸ் நடிகர் ஏமாற்றம்

  பிரம்மாண்ட காட்சிகள் வைத்து வானத்திலேயே வேடிக்கை காட்டினால் படம் பிச்சிக்கிட்டு போகும் என நினைத்த மாஸ் நடிகருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது இந்த ஆண்டு வெளியான அந்த பெரிய பட்ஜெட் படம். அதன் காரணமாக அடுத்த படத்தை வெயிட்டாக கொடுக்க வேண்டும் என நினைத்த அவருக்கு ஏற்கனவே கொடுத்த வாக்கு காரணமாக பக்கத்து ஸ்டேட் இயக்குநருடன் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகி விட்டது.

  மெகா சீரியல்

  மெகா சீரியல்

  ஏற்கனவே படத்தின் பல காட்சிகள் லீக் ஆகி இதுவொரு மெகா சீரியல் போல இருக்கே என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், எப்படியாவது பட்டி டிக்கெரிங் பண்ணி படத்தை ஓட்டி விடலாம் என்கிற முடிவுக்கு நடிகர் வந்து விட்டார். ஆனால், வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

  பயம் வந்துடுச்சு

  பயம் வந்துடுச்சு

  கதையின் மீதும் படத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் ப்ரமோஷன் கூட பண்ணாமல் படத்தை வெளியிட்டு விடலாம். ஆனால், இந்த முறை போட்டி நடிகருடன் போட்டி போட வேண்டிய சூழலில் எந்த இடத்திலும் எதுவும் மிஸ் ஆகிவிடக் கூடாது என்கிற பயம் அதிகமாகவே அந்த நடிகருக்கு வந்து விட்டதாக கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.

  ரசிகர்கள் மீது நம்பிக்கை

  ரசிகர்கள் மீது நம்பிக்கை

  தனக்கு இருக்கும் ஒரே பலம் தனது ரசிகர்கள் மட்டும் தான் என்பதை நினைத்த அந்த நடிகர், அவர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் திடீரென அதி தீவிரம் காட்டி வருகிறார். தனியாக சில நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து கூட தான் தான் நம்பர் ஒன் என்பதை தொடர்ந்து சொல்ல சொல்லி வருவதாகவும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. படம் பிடிக்கவில்லை என்று போன முறை கைவிட்டது போல இந்த முறை ரசிகர்கள் கை விட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார்.

  முதல் நாள் முக்கியம்

  முதல் நாள் முக்கியம்

  போதாக் குறைக்கு போட்டி நடிகரின் படம் வெளியாக உள்ளதால் பெரிய அளவில் இவருக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் நாளே வரும் கூட்டத்தை வைத்து ஒட்டுமொத்தமாக கல்லா கட்டி விடலாம் என்று நினைத்ததிலும் கடைசி நேரத்தில் டாப் நடிகர் பந்தயத்துக்கு நானும் வரேன் பங்கு என சொல்ல முதல் நாள் வசூல் நடிகருக்கு ரொம்பவே முக்கியமாக மாறிவிட்டது.

  தயாரிப்பாளரை தூண்டிவிட்டு

  தயாரிப்பாளரை தூண்டிவிட்டு

  இதுவரை சைலன்ட்டாக அந்த ஸ்டேட்டில் எழுந்த பிரச்சனையின் போதெல்லாம் மெளனம் காத்து வந்த தயாரிப்பாளர் திடீரென இந்த அளவுக்கு பேசக் காரணமே மாஸ் நடிகரின் தூண்டுதல் தான் என்கின்றனர். நள்ளிரவு காட்சியெல்லாம் வைத்து விமர்சனங்கள் வெளியாகும் முன்னமே ரசிகர்களை டிக்கெட்டுகளை வாங்க வைக்க பல வழிகளில் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

  English summary
  Popular actor worry about his next movie results and Box office clash talks goes like a wild fire in cinema industry. He also upset with the output of the movie talks also went out in closed circles.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X