லவ் பிரேக்கப்.. ஓவர் குடி.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வாரிசு நடிகை.. இப்படி ஆகிட்டாரே?
சென்னை: பிரபல நடிகரின் மகளும் வாரிசு நடிகையுமான அந்த நடிகை காதல் பிரேக்கப் ஏற்பட்ட நிலையில், குடிக்கு அடிமையாகி விட்டார் என்றும் படங்களில் நடிப்பதையே குறைத்துக் கொண்டார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
வாரிசு நடிகை காதலித்தாரா என்பதே ஆச்சர்யமான கேள்வியாக பலருக்கும் இருக்கும் என்கின்றனர். அந்தளவுக்கு பரம ரகசியமாக தனது காதல் வாழ்க்கையை பாதுகாத்து வந்த நடிகை அதில், திடீரென தோல்வியை தழுவியதால் மனதளவில் கடுமையான பாதிப்பை சந்தித்தார் என்கின்றனர்.

தன்னுடைய காதலரை இன்னொரு பெண்ணுடன் பார்த்த நொடியில் இருந்து மது போதைக்கு அடிமையாகி படங்களில் நடிப்பதை கூட மொத்தமாக விட்டுவிட்டாராம். அதனால் தான் ரொம்ப வருஷமாக இந்த வாரிசு நடிகை பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
பப்ளிக் விசிட்: மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து மும்பையில் விழா ஒன்றில் சமீபத்தில் நடிகை பங்கேற்ற நிலையில், அவரை பார்த்த பலரும் அந்த நடிகரின் மகளா இவர் இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என பாவமாகவும் அதிர்ச்சியாகவும் நடிகையை பார்க்க, நடிகை கொஞ்ச நேரத்திலேயே அந்த இடத்தை காலி செய்துவிட்டு நகர்ந்து சென்று விட்டது மேலும், வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகிவிட்டது என்கின்றனர்.
ஓவர் குடி போதை: ஸ்லிம்மாக இருந்த நடிகை சில ஆண்டுகளில் ஸ்பாட்லைட் படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ரொம்பவே உடல் பருமனாக காணப்பட்டது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது. மேலும், அவரது கண்கள் எல்லாம் ரொம்பவே சிவந்து இருந்த நிலையில், மதுபோதைக்கு அடிமையாகி விட்டாரா என்கிற கேள்விகளையும் நடிகை குறித்த ஏகப்பட்ட கட்டுக் கதைகளையும் சினிமா வட்டாரத்தில் பலரும் கிளப்பி வருகின்றனர்.
மீண்டும் நடிக்க ரெடி: காதலருடன் ஏற்பட்ட பிரேக்கப் தான் நடிகையின் இந்த நிலைக்கு காரணம் என்றும் சமீப காலமாக அதிலிருந்து மீண்டு வரும் அவர், மீண்டும் நடிக்க சில தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் நேரில் சென்று சந்தித்து வருவதாக கூறுகின்றனர். பாலிவுட்டில் நடிக்கலாம் என்கிற முடிவிலும் நடிகை இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பழைய படி அந்த வாரிசு நடிகை மீண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











