இந்த முறை யாருக்கெல்லாம் ஜாக்பாட்டோ.. அந்த மாஸ் நடிகர் படத்தில் நடிக்க துண்டு போடும் பிரபலங்கள்!

சென்னை: மாஸ் நடிகர் படம் என்றாலே ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா பிரபலங்களுக்கும் தீபாவளி தான்.

சின்ன சின்ன ரோல்களில் நடிக்கக் கூட இளம் ஹீரோக்கள் முதல் பல பிரபலமான நடிகர்கள் வரை போட்டிப் போட்டு குவிவது வழக்கமான ஒன்று தான்.

அடுத்த மாதம் தொடங்கவுள்ள மாஸ் நடிகரின் புதிய படத்தில் தங்களை ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ள ஏகப்பட்ட பிரபலங்கள் துண்டு போட்டு வருகின்றனராம்.

கலெக்‌ஷன் கிங்

கலெக்‌ஷன் கிங்

கோலிவுட்டின் வசூல் ராஜாவாகவே வாழ்ந்து வருகிறார் அந்த மாஸ் நடிகர். கொரோனா காலத்திலும் மக்கள் அவரை பார்க்க மட்டும் தியேட்டருக்கு குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக கிளம்பிப் போன அதிசயமும் நிகழ்ந்தது. இந்நிலையில், அந்த மாஸ் நடிகரின் அடுத்த படம் பிரம்மாண்டமாக அடுத்த மாதம் தொடங்குகிறது.

பெரிய பட்ஜெட்

பெரிய பட்ஜெட்

போன படத்தை விட இந்த முறை இன்னமும் பட்ஜெட் ரொம்பவே பெருசு என்பதால், எதிர்பார்ப்பும் வியாபாரமும் இப்பவே சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதால் பல பிரபலங்கள் இப்போதே இயக்குநர் அலுவலகத்தையும் தயாரிப்பாளர் அலுவலகத்தையும் முற்றுகையிட தொடங்கி விட்டார்களாம்.

பக்கத்து ஸ்டேட்

பக்கத்து ஸ்டேட்

அறிமுகம் ஆனது என்னவோ கோடம்பாக்கத்தில் இருந்தாலும், கொடி கட்டி பறப்பது பக்கத்து ஸ்டேட்டில் தான். கடந்த சில படங்களாகவே மாஸ் நடிகர் படத்தில் நடிக்க வேண்டும் என தூண்டில் போட்டு வந்த அவருக்கு இந்த முறை மிஸ் ஆகாமல் வாய்ப்பு கனிந்துள்ளது. மாஸ் நடிகருடன் சேர்ந்து செம மாஸ் நடனம் ஒன்றை போடவும் ரெடியாகி விட்டார்.

ஒன்னுக்கு ரெண்டு

ஒன்னுக்கு ரெண்டு

ஒன்னுக்கு ரெண்டு என்ன மூணா வந்தாலும் சமாளிக்கக் கூடிய மாஸ் நடிகர் படத்தில் எப்படியாவது இடம்பிடித்து விட வேண்டும் என மேலும் சில நடிகைகள் டார்கெட் பண்ணி காய்களை நகர்த்தி வருகின்றனர். இரண்டாவதாக இன்னொரு நடிகைக்கும் படத்தில் வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

சின்ன ரோலுக்கு கூட

சின்ன ரோலுக்கு கூட

நடிகைகளை தாண்டி ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் மாஸ் நடிகர் படத்தில் சின்ன ரோலில் நடிக்கக் கூட பஸ்சில் துண்டு போடுவது போல இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பிடமும் அந்த மாஸ் நடிகர் தரப்பிடமும் வாய்ப்புக்காக நச்சரிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளார்களாம். அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்குள் எப்படியாவது உள்ளே நுழைந்து விட திட்டம் திட்டி வருகிறார்களாம் பல முன்னணி நடிகர்கள்.

இந்த முறை யார்

இந்த முறை யார்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இருந்து வந்த அந்த இயக்குநர் அதே டிவியை சேர்ந்த நடிகர்களை தொடர்ந்து தனது படங்களில் அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த முறை அந்த ஜாக்பாட்டான வாய்ப்பு எந்த பிரபலத்துக்கு கிடைக்கப் போகிறது என்றும், மாஸ் நடிகர் படம் என்பதால் பல முன்னணி டிவி நடிகர்களும் அந்த இயக்குநருக்கு குட் மார்னிங் மெசேஜ் எல்லாம் போட்டு ஐஸ் வைக்க தொடங்கி விட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X