மனைவி பேச்சை மீறியதால் தான் பிரைட் நடிகருக்கு வெற்றி கிடைத்ததா?.. மீண்டும் அந்த பக்கம் இழுக்குறாரே?

By Staff

சென்னை: மனைவியின் பேச்சைக் கேட்டு பிரைட் நடிகர் ஓடிடி பக்கம் போனதில் இருந்து தான் அவருக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்தது. காமெடி டைரக்டர் படம் பண்ணப் போகிறார் என்றவுடனே கணவரை கலாய்த்தவர் எல்லாம் படம் பண்ணவே கூடாது என மனைவி ஏகப்பட்ட முட்டுக்கட்டையை போட்டாராம். ஆனால், இந்த முறை இது க்ளிக் ஆகும் என நடிகர் நினைத்த நிலையில், மனைவி பேச்சை மீறி இந்த படத்தை கையில் எடுத்ததன் விளைவு தான் பல வருடங்களுக்குப் பிறகு இப்போ வெற்றியை பார்த்துள்ளார் என்கின்றன்ர்.

மேலும், மனைவி பேச்சைக் கேட்டு பாலிவுட் வரை சென்று பணத்தை தண்டம் பண்ணது தான் மிச்சம் என்றும் பெரிதாக எதுவும் கைகொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

Popular Actor s Wife again plans to milking his Husband s Success
Photo Credit:

ஆனால், தற்போது கணவருக்கு கிடைத்துள்ள வெற்றியை சரியாக அறுவடை செய்ய வேண்டும் என மீண்டும் அவரை மும்பைக்கு அழைத்து அங்கே பெரிய படங்களை பிடித்துக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்துள்ளார் மனைவி என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

மனைவி பேச்சை மீறியதால் வெற்றி: கடந்த சில ஆண்டுகளாகவே கணவரை ஒட்டுமொத்தமாக கன்ட்ரோலில் மனைவி வைத்துக் கொண்டார் என்றும் அவர் சொல்வதை மட்டுமே தலையாட்டி பொம்மை போல கேட்கும் நிலையில், கணவர் செயல்பட்ட நிலையில் தான் தனது பழைய கெத்தை எல்லாம் விட்டு விட்டு பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடி வாங்கினார் என்றும் இந்த முறை மனைவி பேச்சை மீறி ஒரு முடிவை எடுத்த நிலையில் தான் பிரைட் நடிகருக்கு பிரகாசமான வாழ்க்கை கிடைத்துள்ளது என்கின்றனர்.

இது தான் நல்ல நேரம்: இந்த வெற்றியை நடிகர் இப்படியே அடுத்தடுத்து இங்கேயே ஃபோகஸ் செய்து எடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் மனைவி மூக்கை நுழைக்கத் தொடங்கி விட்டார் என்கின்றனர். இதுதான் நல்ல நேரம் என்றும் உங்களோட பவர் உங்களுக்கே தெரியல. பான் இந்தியா ஹீரோவாக உங்களை மாத்திக் காட்டுறேன் வாங்க என நடிகை மீண்டும் நடிகரை மூளை சலவை செய்யத் தொடங்கி விட்டார் என்கின்றனர். நடிகர் சுதாரித்துக் கொள்வாரா? அல்லது மறுபடியும் பழைய படி சிக்கலில் சிக்குவாரா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X