உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிரைட் நடிகரின் மனைவி?
சென்னை: கோலிவுட்டில் இதற்கு மேல் எதிர்காலமே இல்லை என்றும் பாலிவுட்டில் பொற்காலம் சிகப்பு கம்பளம் விரித்துக் கொண்டு காத்திருப்பதாக தனது கணவருக்கு ஏகப்பட்ட ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்ற நடிகை தற்போது அங்கே எந்த பருப்பும் வேகவில்லை என்பதை புரிந்துக் கொண்ட நிலையில், மீண்டும் கோலிவுட் பக்கமே திரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
இந்தியில் டாப் ஹீரோயினாக மாறிவிடலாம் என்றும் அங்கே வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் குவிகிறது என்றும் கோலிவுட் போல எல்லாம் கிடையாது என ஓவர் பில்டப் கொடுத்துச் சென்ற நடிகைக்கு ஏற்கனவே இங்கே பெரிய கூட்டமே சான்ஸுக்கு திண்டாடிக் கொண்டிருக்கிறது. இதுல நீங்க வேறையா என துரத்தி அடித்து விட்டார்களாம்.

ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தும், அவையெல்லாம் நடிகைக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில், பழைய பன்னீர் செல்வமாக எங்கே நம்மை மக்கள் பெரிதும் நேசித்தார்களோ மீண்டும் அங்கேயே போவோம் என பெட்டி படுக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அந்த நடிகைக்கு ராஜ யோகம்: பிரைட் நடிகரின் மனைவி பாலிவுட் பக்கம் பறக்க ஆசைப்பட்ட நிலையில், கோலிவுட்டே போதும் என கொக்கு போல காத்திருந்த அந்த சீனியர் சிம் நடிகைக்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் கிடைத்து வரும் நிலையில், பிரைட் நடிகையை பங்கமாக கலாய்த்து விட்டாராம். கொடிகட்டி வாழ்ந்த இடத்தை குடும்ப பிரச்சனை காரணமாக விட்டு விட்டுச் சென்றது ரொம்பவே தப்பாகி விட்டது என்பதை லேட்டாக புரிந்துக் கொண்ட நடிகை புதுசா வீடு கட்டிக் கொண்டு மீண்டும் யூடர்ன் அடித்து இங்கேயே வந்து விட்டாராம்.
அந்த பார்ட்டியே அதுக்குத்தானாம்: இதுவரை இப்படியெல்லாம் அந்த நடிகர் பார்ட்டி வைத்து தனது சந்தோஷமான நாளை கொண்டாடியதே கிடையாதாம். ஆனால், இந்தமுறை பெரியளவில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதே நடிகரின் மனைவி தானாம். அதற்கு முக்கிய காரணமே பல இளம் இயக்குநர்கள் படங்களில் தனக்கு நடிக்க வாய்ப்புகளை வாங்குவதற்காகவும் தனது கணவருக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுக்கவும் தான் மனைவி போட்ட மாஸ்டர் பிளான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











