தயாரிப்பாளருடன் கனெக்ஷனா? விவாகரத்து நடிகை அப்படி கோபப்பட அதுதான் காரணமா?
சென்னை: சமீபத்தில் நடிகரை விவாகரத்து செய்த அந்த நடிகையை பற்றி ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக வலைதளத்தில் குவிந்து வருகிறது.
இந்நிலையில், திடீரென தனது சமூக வலைதள பக்கத்தில் ரொம்ப நாள் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை கொடுப்பது போல நடிகை ஒரு போஸ்ட் போட்டிருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், நடிகைக்கும் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கும் கனெக்ஷன் என கிளம்பிய தகவல் தான் நடிகையை அந்த அளவுக்கு அப்செட் ஆக்கி உள்ளதாம்.

கண்டித்த கணவர்
கண்டபடி நடிக்கக் கூடாது என கணவரும் அவர் வீட்டு பெரியவங்களும் கண்டிச்சது தான் நடிகை திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட காரணம் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பின. விவாகரத்துக்கு பிறகு நடிகையை தொடர்ந்து டார்கெட் செய்து கணவரின் ரசிகர்கள் படுமோசமாக ட்ரோல் செய்தும் அவரது போட்டோக்களை மார்ப்பிங் செய்து போட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிடிச்சதை பண்றாரு
தனக்கு பிடித்தபடி தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆசைப்பட்ட நடிகை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். முன்பை விட தற்போது நடிகையின் மார்க்கெட் உச்சத்திற்கே சென்றுள்ளது. அனைத்து மொழிகளிலும் தயாரிப்பாளர்கள் நடிகையின் டேட் கேட்டு காத்திருக்கின்றனர். டோலிவுட்டில் நடிகைக்கு இனி வாய்ப்பே இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு அங்கேயும் படங்கள் புக் ஆகி வருகின்றன.

பொங்கி எழுந்த நடிகை
பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போல திடீரென நடிகை பொங்கி எழுந்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள அடுக்கடுக்கான போஸ்ட்டுகள் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்ன ஆச்சு அந்த நடிகைக்கு, ஏன் திடீரென இப்படியொரு எச்சரிக்கை பதிவை போட்டு இருக்கிறாரே என ஏகப்பட்ட கேள்விகளும், அதற்கான பதிலாக பல யூகங்களும் கிளம்பின.

தயாரிப்பாளருடன் கனெக்ஷனா
நடிகை புதிதாக குத்தாட்டம் போட்ட தயாரிப்பாளர் படத்திலேயே ஹீரோயினாக கமிட் ஆனதை வைத்து அந்த தயாரிப்பாளருடன் நடிகைக்கு கனெக்ஷன் என்றும் அதன் காரணமாகவே அப்படியொரு குத்தாட்டத்தை ஆட அவர் ஒப்புக் கொண்டார் என்றும் அந்த படத்தின் நாயகியை விட ஒரு பாடலுக்கு ஆட அந்த நடிகைக்கு அவ்வளவு கோடி கொட்டிக் கொடுக்கவும் அதுதான் காரணம் என சில கமெண்ட்டுகள் பரவியது தான் நடிகையின் அந்த கோபத்திற்கே காரணம் என்கின்றனர்.

அமைதியாக இருக்க முடியாது
ஓரளவுக்குத் தான் ட்ரோல்களை தாங்கிக் கொள்ள முடியும் என்றும் எல்லை மீறி செல்பவர்களை சும்மா விடமாட்டேன் என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அந்த நடிகை அப்படியொரு பதிவை போட இதுதான் காரணம் என தகவல்கள் பரவி வருகின்றன. தொடர்ந்து எக்ஸ் கணவர் ரசிகர்கள் கொடுக்கும் டார்ச்சர்களால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











