அந்த மேட்டருக்கு நடிகைகளை பிடித்துக் கொடுத்ததே மனைவி தானாம்.. சீக்கிரமே சிக்க வாய்ப்பிருக்காம்!
மும்பை: கசமுசா படங்களில் நடிக்க ஏகப்பட்ட நடிகைகளை கணவருக்கு பிடித்துக் கொடுத்ததே மனைவி தான் என பாலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பெரிதும் பிரபலமில்லாத கணவர் செய்யும் வேலை பற்றி எந்த நடிகைக்கும் தெரியாத போது, மனைவி நடிகை என்னோட வெப்சீரிஸில் நடிக்க வாங்க என விரித்த வலையில் தான் பல நடிகைகளும் இளம் பெண்களும் சிக்கினார்களாம்.
ஆனால், ரொம்பவே உஷாரான அவர் அந்த மேட்டரில் தனது பெயர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறாராம்.

கசமுசா படங்கள்
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பாலிவுட் படங்களிலேயே நிர்வாணக் காட்சிகளில் முன்னணி நடிகைகளே நடித்து வரும் நிலையில், ஒடிடி தளங்களின் வருகையால் தணிக்கையும் இல்லாமல் போக கசமுசா படங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

முழு நிர்வாணமாக
நடிகைகள் முழு நிர்வாணமாகவும் சக நடிகர் உடன் உடலுறவு கொள்ளும் வகையிலும் ஆபாச படங்கள் ஒடிடி தளங்களிலும் ஆண்டிராய்டு ஆப்களிலும் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. சட்டத்தில் இருந்து தப்பிக்க இதற்கு வேறு சில பெயர்களை வைத்துக் கொண்டும் பலரும் தப்பிக்க முயற்சித்து வருகின்றனர்.

சிக்கிய கணவர்
இந்த கசமுசா படங்கள் விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகையின் கணவரை பல மாதங்கள் பொறி வைத்து பிடித்திருக்கிறது போலீஸ். கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கும் அந்த மேட்டருக்கும் சம்மந்தமே இல்லை என எஸ்கேப் ஆகி வருகிறார் அந்த பிரபல நடிகை.

நடிகைகளுக்கு வலை
வெப்சீரிஸ் எடுக்கிறோம் என்கிற பெயரில் சில கவர்ச்சி நடிகைகளுக்கு பெருந்தொகையை கொடுத்து கசமுசா படங்களில் நடிக்க வலை விரித்ததே அந்த மனைவி நடிகை தான் என்பதை மோப்பம் பிடித்த பின்னரே இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன.

ஆதாரம் தேடி
இந்த விவகாரத்தில் மனைவி நடிகைக்கும் சம்மந்தம் இருக்கும் விஷயம் தெரிந்தாலும், அவர் மீது சரியான ஆதாரத்தை தேடி வருகிறார்களாம் போலீசார். சீக்கிரமே அந்த ஆதாரங்கள் கிடைத்து விட்டால் அதிரடியாக மனைவி நடிகையையும் கம்பி எண்ண வைப்பது தான் காவலர்களின் திட்டமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தப்பிக்கும் முயற்சி
இந்த விவகாரத்தில் சில நடிகைகள் நேரடியாக மாட்டி உள்ள நிலையில், அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தன் பெயரும் இந்த விவகாரத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக ரொம்பவே உஷாராக செயல்பட்டு வருகிறாராம் அந்த பிரபல நடிகை.

கோடிக் கணக்கில் பிசினஸ்
பாலிவுட் நடிகைகளின் நிர்வாண வீடியோக்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறதாம். கவர்ச்சி நடிகைகளை தாண்டி ஒரு சில முன்னணி நடிகைகளையும் இது போன்ற கசமுசா வீடியோக்களில் நடிக்க வைத்திருக்கிறாராம் அந்த மனைவி நடிகை. கோடி கணக்கில் பிசினஸ் நடப்பது தெரிய வரவே இந்த விவகாரத்தில் போலீசாரும் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெயர் கெட்டுப் போச்சு
கணவர் கைதான நிலையில் தனது பெயர் கெட்டுப் போச்சு என புலம்பி வரும் அந்த நடிகை உண்மையில் பெயரை பற்றி கவலைப் படவில்லையாம். அதற்கு மாறாக எங்கே நம் தலையும் இந்த மேட்டரில் சேர்ந்து உருளுமோ என்கிற அச்சம் மட்டுமே இருக்கிறதாம். சில நடிகைகள் இவர் பெயரை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











