விவாகரத்தை நோக்கி நகரும் பிரைட் நடிகரின் மனைவி?.. கணவர் பேச்சுக்கு மரியாதையே இல்லையாம்!

By Staff

சென்னை: பிரைட் நடிகரின் மனைவி தன்னுடைய பேச்சை எதுவரை கணவர் கேட்டு இருக்காரோ அதுவரை மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற முடிவுடன் இருப்பதாக பிரபலம் ஒருவர் பெரிய குண்டை தூக்கி கோலிவுட்டில் போட்டுள்ளார். தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்து வருவதாகவும் அதை தவிர்க்கவே இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

ஆரம்பத்தில் இருந்தே எல்லை மீறிய காட்சிகளில் நடித்து பிரபல நடிகையாக மாறிய அந்த நடிகைக்கு கால் கட்டு போட்ட பிறகு குடும்பத்தில் ஈடுபாடே இல்லாமல் இருந்து வந்ததாக கூறுகின்றனர்.

gossip kollywood actress gossip

குழந்தைகள் வளர்ந்த நிலையில், பல தடைகளை தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக கணவரை தனது வழிக்கு கொண்டு வந்து மீண்டும் சினிமாவில் நடித்தார் அந்த நடிகை என்றும் சினிமா வட்டாரத்தில் சமீபத்தில் பேசும் போது அந்த பிரபலம் தெரிவித்துள்ளார்.

பிரிந்து வாழ்கின்றனர்: ஊருக்கு மட்டுமே கணவன் - மனைவியாக காட்சி தந்தாலும் கடந்த சில மாதங்களாகவே நடிகரும் நடிகையும் சேர்ந்து வாழவில்லை என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி வந்த நிலையில், அதெல்லாம் உண்மை தான் என சினிமா கிசுகிசுக்களை கூறி வரும் பிரபலம் ஒருவர் வீடியோ ஒன்றையே வெளியிட்டு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மீண்டும் கவர்ச்சி: நடிகை தனது உடல் எடையை குறைக்க காரணமே மீண்டும் பழையபடி கவர்ச்சியாக டிரெஸ் பண்ணிக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் தனது லட்சிய பயணத்தை நோக்கி நடிகை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருவது சமீப காலமாக கணவருக்கே பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

கட்டுப்பாடு போட்டா காலி: கன்ட்ரோல் பண்ணாமல் இருந்தால் கடைசி வரை மனைவியாக இருப்பேன் என்றும் கட்டுப்பாடு ஏதாவது போட்டால் உடனடியாக டைவர்ஸ் பண்ணிடுவேன் என்கிற அளவுக்கு அந்த நடிகை தனது கணவரையே எச்சரித்துள்ளதாக அந்த பிரபலம் பகீர் கிளப்பியுள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால், சில மாதங்கள் தனியாக வாழ்ந்து பார்க்கலாம் என்றும் நடிகையின் முடிவில் தலையிடாமல் ஒதுங்கி தனக்குப் பிடித்த வேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவில் தான் தற்போது அந்த பிரைட் நடிகர் இருப்பதாக கூறுகின்றனர்.

போல்டாக நடிக்க ரெடி: நிகழ்ச்சிகளுக்கே கவர்ச்சி உடையில் அந்த நடிகை வரக் காரணமே அக்கட தேசத்து படங்களில் போல்டாக நடிக்கவும் தான் ரெடி என்கிற சிக்னல் கொடுக்கத்தான் என்றும் பெரிய நடிகர்களுடன் மீண்டும் ஜோடி போட்டு நடிக்கும் முடிவுக்கு அந்த நடிகை வந்து விட்டார் என்றும் அந்த பிரபலம் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X