ஒரே பார்ட்டி தானாம்.. அந்த சந்தோஷத்தை குடியும் கும்மாளமுமாய் கொண்டாடி வருகிறாராம் பிரபல நடிகை!
சென்னை: பல வருடங்கள் கழித்து மறுபடியும் என்ட்ரி கொடுத்திருக்கும் சந்தோஷத்தில் ஏகப்பட்ட பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருகிறாராம் அந்த நடிகை.
கடற்கரை சாலையில் பல பங்களாக்கள் பார்ட்டி வீடுகளாக மாறி உள்ள நிலையில், இவரையும் ஏகப்பட்ட இடங்களில் வீக்கெண்ட் ஆனால் பார்க்கலாம் என்கின்றனர்.
மாஸ் நடிகரின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பால் செம குஷியில் இருக்கும் அந்த கால் அழகியும் கண்ட மேனிக்கு குடித்து கும்மாளம் அடித்து வருகிறாராம்.

வீக்கெண்ட் பார்ட்டி
இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீக்கெண்ட் ஆனாலே பார்ட்டி மோடுக்கு சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பிய போது நடிகை ஒருவரின் கார் விபத்துக்குள்ளானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகைகள்
ஆனாலும், பார்ட்டி பண்ணுவதை தொடர்ந்து முன்னணி நடிகைகளும் கை விடாது செய்து வருகின்றனர். ஆனால், உஷாராக பார்ட்டிக்கு செல்லும் போது தனியாக டிரைவர்களை அழைத்து செல்வதால் தான் பலரும் விபத்து போன்ற விவகாரங்களில் சிக்காமல் தவித்து வருகின்றனர்.

கோலிவுட் ரிட்டர்ன்ஸ்
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்துள்ள அந்த கால் அழகிக்கு மாஸ் நடிகர் படத்தில் வாய்ப்பு கிடைத்த நிலையில், செம குஷியில் அடிக்கடி பார்ட்டிக்கு சென்று வருவதாக தகவல்கள் லீக்காகி உள்ளன.

கடற்கரை ரெசார்ட்டுகளில்
கடற்கரையில் உள்ள ரெசார்ட்டில் வீக்கெண்ட் ஆனால் தனது தோழிகள் மற்றும் தோழர்களுடன் கும்மாளம் அடித்து வரும் அந்த பிரபல நடிகை இரவு நேரங்களில் பார்ட்டிகளிலும் குடித்து கொண்டாடி வருகிறாராம். வார நாட்களில் டோட்டலாக ஆளே மாறி ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் பிசியாக நடித்து கொடுத்து வருகிறாராம்.

வசூல் வேட்டை
டாப் நடிகர்களுடன் நாடு முழுவதும் பறந்து பறந்து நடித்து வரும் அந்த கால் அழகியின் சம்பளம் பல கோடிகளை கடந்து வசூல் வேட்டை ஆடி வருகிறார். மாஸ் நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைத்த நிலையில் வேற லெவல் மவுசு கூடியிருக்கிறதாம். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமீட் ஆகி வருவதால் அந்த நடிகையை சுற்றி ஏகப்பட்ட ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் மேனேஜர்கள் மொய்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பார்ட்டியில் ஒப்பந்தம்
மாஸ் நடிகர் படத்தைத் தொடர்ந்து மேலும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கவும் இது போன்ற பார்ட்டிகளில் தான் ஒப்பந்தங்கள் நடக்கின்றன என்கிற தகவலும் கசிந்துள்ளன. அடுத்ததாக ஒல்லி நடிகர் படத்திலும் இதே போன்ற ஒரு பார்ட்டியில் வைத்தே கால் அழகி கமீட் ஆகி இருக்கிறார் என்றும் கிசுகிசுத்து வருகின்றனர்.

அந்த நடிகருக்கும் ஜோடி
ஒல்லி நடிகர் படத்தில் மட்டுமின்றி இன்னொரு டாப் நடிகர் படத்திலும் கால் அழகியை கமீட் செய்ய தற்போது பேச்சுவார்த்தைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ள அந்த நடிகை கிடைக்கும் அட்வான்ஸ்களை எல்லாம் அள்ளி போட்டு டேட்ஸ்களை தாராளமாக கொடுத்து வருகிறாராம். பார்ட்டி மூலம் புதிய பட வாய்ப்புகள் கிடைத்தால் யார் தான் சும்மா விடுவார்கள். கும்மாளம் போட்டாலும் காரியத்தில் கண்ணாய் இருந்தால் நலம் தான் என கோடம்பாக்க கோடாங்கி குடுகுடுப்பை அடித்து விட்டு செல்கிறார்.


Click it and Unblock the Notifications











