நம்பர் நடிகை ராசி என்ன இப்படி இருக்கு.. எது தொட்டாலும் கணவருக்கு கஷ்ட காலமாவே இருக்கே?
சென்னை: நம்பர் நடிகையை அந்த பிரபல இயக்குநர் திருமணம் செய்த பின்னர் தொடர்ந்து கஷ்ட காலமாகவே இருக்கிறதே என சினிமா வட்டாரத்தில் தீவிரமான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஒரு பக்கம் நடிகைக்கும் தொடர்ந்து அடி வாங்கி வருகிறதாம். இன்னொரு பக்கம் கணவருக்கும் ஏகப்பட்ட சிக்கல் அடுத்தடுத்து உருவாகி வருகிறது என்கின்றனர். பல கோயில்களுக்கு சென்றும் பரிகாரங்கள் செய்தும் என்ன பிரச்சனை என்றே புரியவில்லை என நம்பர் நடிகையே பரிதவிப்பில் உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
திருமணத்தை பெரிதாக டெலிகாஸ்ட் செய்து பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து நடிகை போட்ட பிளானில் இருந்து கணவரின் சமீபத்திய படம் வரை தொடர்ந்து பல சிக்கல்கள் வந்துக் கொண்டே இருப்பதால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறுகின்றனர்.

எதுவுமே விளங்கல: எப்படியாவது கணவரை பெரிய இயக்குநராக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் நடிகை எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வியில் சென்று முடிந்தது நடிகையை அப்போதே மனதளவில் ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. கணவரின் தொழிலுக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு அந்த டாப் நடிகர் பண்ண வேலையால் பயங்கர கடுப்பானார் நம்பர் நடிகை.
படம் ஓடல: நம்பர் நடிகைக்கு போட்டியாக இன்னொரு நம்பர் நடிகை சமீப காலமாக கோலோச்சி வரும் நிலையில், அந்த தலைவலியில் இருந்து மீண்டு எப்படியாவது ஹிட் கொடுத்தாக வேண்டும் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்தாலும் நம்பர் நடிகைக்கு எதுவுமே செட் ஆகவில்லையாம். கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் எல்லாம் திருமணமான பெண் என கழட்டி விட்ட நிலையில், சோலோவாக நடித்த உணவு படமும் ஓடாமல் போனது நடிகையை ஷாக் ஆக்கியது.
புடிச்ச டைட்டில்: இந்நிலையில், கணவரின் படத்திற்கு ஒரு வழியாக மாஸ் நடிகரின் உதவியை நடிகை நாடிய நிலையில், அது கிடைத்ததாகவும் ஆனால், தற்போது அந்த படத்தின் தலைப்புக்கு பெரிய பஞ்சாயத்து கிளம்பிய நிலையில், நடிகைக்கு புடிச்ச டைட்டில் ஆச்சே இப்படி ஆகிடுச்சே என சினிமா வட்டாரத்தில் ஒரே பேச்சாக பரவி வருகிறது.
கண் திருஷ்டி: நடிகைக்கும் அவரது கணவருக்கும் அதிகளவில் ஏற்பட்டுள்ள கண் திருஷ்டி தான் எல்லாத்துக்கும் காரணம் என்றும் திருமணத்தில் இருந்தே இது தொடர்ந்து வருவதாகவும் கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சு அடிபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











