திருமணத்தில் விழுந்த சாபம் நம்பர் நடிகையின் குடும்பத்தை விட்டு இன்னும் போகலையாம்.. கஷ்டத்தில் கணவர்?
சென்னை: நம்பர் நடிகைக்கு திருமணத்தின் போது விழுந்த சாபம் இன்னமும் போகவில்லை என சினிமா பிரபலம் ஒருவர் பேசியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது. குடும்பத்தில் எந்த கஷ்டமும் வரக் கூடாது என்பதற்காகத்தான் கணவருடன் சேர்ந்து பல்வேறு கோயில்களுக்கு அந்த நடிகை சென்று வந்தார்.
ஆனால், தொடர்ந்து கணவருக்கு சினிமாவில் எதுவுமே கை கொடுக்காத அளவுக்கு சாபம் விரட்டி வருவதாக கூறுகின்றனர். நடிகைக்கும் அவரது கணவருக்கும் யாராவது ஏதாவது செய்து விட்டார்களா? என்கிற அச்சமும் எழுந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற நிலைமையில் தான் நடிகையும் அவரது கணவரும் தொடர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்து வருவதாக கூறுகின்றனர்.
காதல் திருமணம்: சில பிரபலங்களை காதலித்த அந்த நம்பர் நடிகை அவர்களை பிரேக்கப் செய்து விட்டு பிரிந்த நிலையில், கடைசியாக அந்த இயக்குநரை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். திருமணத்தின் போதே இயக்குநரின் உறவினர்கள் சிலர் சாபமிட்டனர். மேலும், சினிமா வட்டாரத்திலும் நடிகைக்கு எதிரானவர்கள் சிலர், விட்ட சாபம் காரணமாக தொடர்ந்து நடிகைக்கும் அவரது கணவருக்கும் தொழில் ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது என்கின்றனர்.
எதுவுமே செட்டாகல: டாப் நடிகரை வைத்து படம் பண்ண நினைத்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் கைக்கு வந்த வாய்ப்பு, கையை விட்டுச் சென்றது. அடுத்து காமெடி இயக்குநரை ஹீரோவாக்கி ஒரு படத்தை பண்ண நினைத்த இயக்குநருக்கு ஆரம்பத்தில் இருந்து அடிமேல் அடி விழுந்த நிலையில், தற்போது அந்த படமும் தேறாது என்கிற நிலைக்கு வந்து விட்டது என்கின்றனர்.
நடிகையின் ராசி காரணமா?: நம்பர் நடிகையின் கணவருக்கும் நடிகைக்கும் மட்டும் இது பிரச்சனை இல்லை என்றும் இயக்குநர் ஹீரோயினாக தேர்வு செய்த ஹீரோயினுக்கும் எந்தவொரு படமும் சரியாக அமைவதில்லை என்றும் அடிக்கடி படங்கள் ஆரம்பித்து பாதியிலேயே நின்று விடும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். அந்த நடிகையின் ராசியும் இப்படி இயக்குநரை போட்டு வாட்டி வதைக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
பரிகாரம் செய்ய முடிவு: அந்த நம்பர் நடிகைக்கும் அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சரியாக ஹிட் அடிக்காமல் சொதப்பி வரும் நிலையில், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க பெரிய பரிகார பூஜையை செய்யப் போவதாக கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











