அவரோட பெயரை காப்பாத்த.. என் பேரை டேமேஜ் பண்ணுவீங்களா.. அவார்டு நடிகை ஆத்திரம்!

By Staff

சென்னை: தனது காதல் விவகாரம் பற்றி தேவையில்லாமல் கிளம்பிய வதந்தியால் ரொம்பவே மன உளைச்சலுக்கு அந்த அவார்டு நடிகை ஆளாகி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த அந்த அவார்டு நடிகை சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகைக்கும் பிரபல நடிகர் ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பூதம் ஒன்று கிளம்பிய நிலையில், அதனை மடைமாற்ற நடிகைக்கு ஏற்கனவே ஒரு காதல் இருப்பதாக இன்னொரு பூதத்தை கிளப்பி விட்டுள்ளனர்.

மாப்பிள்ளை பார்க்கும் அம்மா

மாப்பிள்ளை பார்க்கும் அம்மா

நடிகைக்கு பெரிய இடத்தில் அம்மா மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில், நடிகை பற்றிய தேவையில்லாத வதந்திகள் அதிகம் பரவி வருவது அவரை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. நடிகை சினிமாவில் பயங்கர பிஸியாக நடித்து வரும் நிலையில், திருமணத்தையும் தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகிறார். இதற்கிடையே நடிகை பற்றிய பேச்சுக்கள் பூதாகரமான நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

நடிகருடன் தொடர்பு

நடிகருடன் தொடர்பு

பிரபல நடிகருக்கும் அவார்டு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக நடிகரின் ஹேட்டர்கள் கிளப்பி விட்ட வதந்தியால் பெரும் பிரச்சனை சமூக வலைதளங்களில் வெடித்தன. இந்நிலையில், அந்த பிரச்சனை திசை திருப்ப நடிகரின் தரப்பு வேறு ஒரு வழியை கையாண்டது நடிகையை ரொம்பவே ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.

ஆத்திரப்பட்ட நடிகை

ஆத்திரப்பட்ட நடிகை

அவரோட பெயரை காப்பாற்ற என் பெயரை கெடுப்பீங்களா என நடிகரின் தரப்பிலும் ஆத்திரப்பட்டு கத்தி விட்டாராம் அந்த நடிகை. உடனடியாக தன்னை பற்றிய சர்ச்சை முடிவுக்கு வர நினைத்த நிலையில் தான் அம்மாவை வைத்தே அந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

படத்துக்காக இணைந்து

படத்துக்காக இணைந்து

அவார்டு நடிகை அந்த முன்னணி நடிகரின் அட்மின் தயாரிக்கும் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகரையும் கோர்த்து விட்டு புதிய பிரச்சனையை கிளப்பி உள்ளனர் என்றும் நடிகைக்கு இப்படியொரு சிக்கலை ஏற்படுத்தியது நடிகரின் டீம் என்பது தெரிய வந்த நிலையில், அந்த படத்தில் இருந்தே விலகிவிடுவேன். இனிமேல், இப்படி நடக்கக் கூடாது என நடிகை மிரட்டி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஐடியாவே இல்லை

ஐடியாவே இல்லை

உடனடியாக திருமணம் செய்து கொள். தேவையில்லாத பேச்சுக்கள் எல்லாம் இப்படித்தான் கிளம்பும் என நடிகைக்கு அம்மா மீண்டும் இதுதான் சாக்கு என அட்வைஸ் பண்ண ஆரம்பிக்க, இப்போதைக்கு அந்த ஐடியாவே இல்லை. இன்னும் ஒரு 5 வருஷம் கழிச்சு திருமணம் செய்து கொள்கிறேன். ஆளை விடுங்க என அம்மாவிடமும் சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X