மில்க்கை விட ரோஸ் மில்க் நல்லா இருக்குன்னு கம்பியை நீட்டிட்டாராம்.. நடிகைக்கு துரோகம் செய்த காதலர்?

By Staff

சென்னை: திருமண பேச்சை அந்த நடிகையின் வீட்டார் எடுத்தாலே நடிகையை காதலிக்கும் நடிகர்கள் எல்லாம் கம்பியை நீட்டி விடுகின்றனரே என கோலிவுட்டில் பரபரப்பாக பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. நடிகர்களை காதலிக்கும் பல முன்னணி நடிகைகளும் திடீரென ஒரு கட்டத்தில் பிரேக்கப் செய்து பிரியும் நிலை தான் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

ஒரு சில சினிமா பிரபலங்கள் மட்டுமே உண்மையாக காதலித்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு கடைசி வரை வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இன்றைய அவசர காலத்தில் காதலுக்கு எல்லாம் மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும் காஜிக்குத்தான் பலரும் அலைவதாக கூறுகின்றனர்.

gossip kollywood breakup

நடிகையை சில ஆண்டுகளாக நன்றாக பயன்படுத்தி விட்டு தற்போது போரடித்துவிட இன்னொரு இளம் நடிகையுடன் ரகசியமாக அந்த நடிகர் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததும் தான் நடிகை காதலரை விட்டு கண்ணீருடன் பிரிந்து விட்டார் என்கின்றனர்.

ரோஸ் மில்க் நல்லாருக்குன்னு: பால் மேனி நடிகையை பார்த்ததுமே அந்த நடிகருக்கு ஃபயர் பற்றிக் கொண்டது. அதிலும், நடிகையுடன் உச்சகட்ட காட்சியில் நடிக்க அல்வா போல சான்ஸ் கிடைத்ததும் நடிகையும் தாராளமாக நடிகருடன் இணைந்து கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்ய இருவருக்கும் மனதளவில் சில விஷயங்கள் ஒத்துப்போக இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக இருந்தனர். ஆனால், தற்போது இளம் நடிகை ரோஸ் மில்க் பேபியுடன் நடிகருக்கு ஏற்பட்டுள்ள ரகசிய காதல் நடிகைக்கு தெரிந்ததும் தான் பிரச்சனை வெடித்தது என்கின்றனர்.

திருமண டார்ச்சர்: நடிகையை காதலர் ஏமாற்றி வருகிறார் என்கிற சேதியை நடிகருக்கு பிடிக்காத சிலர் நடிகையின் காதுகளில் விழும்படி கொளுத்திப்போட நடிகை காதலர் தன்னை ஏமாற்றுகிறாரா இல்லையா என்பதை சோதிக்க, திருமணம் செய்துக் கொள்ளலாம் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், இப்போதைக்கு வேண்டாம் என கடந்த சில மாதங்களாக நடிகர் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்க நடிகை கார்னர் செய்ததும் இது செட்டாகாது என நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

கதறி அழுத நடிகை: ஏற்கனவே முதல் காதலரும் இப்படித்தான் திருமண பேச்சை எடுத்ததும் அப்பாவுக்கு பயந்துவிட்டு நடிகையை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். இப்போது ரொம்பவே நம்பிக்கையாக இருந்த காதலரும் மோசம் செய்துவிட்டாரே என ரூமை பூட்டிக் கொண்டு 2 நாட்கள் ஷூட்டிங் ஏதும் போகாமல் நடிகை கதறி அழுததாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X