ஏகப்பட்ட டிமாண்ட்.. 4 கோடி சம்பளம் கொடுங்க.. டீல் பேசிய ‘மி’ நடிகை.. டாட்டா காட்டிய தமாஸ் நடிகர்!
சென்னை: ஆரம்பத்தில் முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு தனது மார்க்கெட்டை உயர்த்தி வந்த நடிகர் சமீப காலமாக இளம் நடிகைகளுடன் இணைந்து நடிக்க காரணமே சம்பள பிரச்சனை தான் எனக் கூறுகின்றனர். அதன் காரணமாகவே தற்போது 'மி' எழுத்து நடிகையை நடிகர் கழட்டி விட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் தீயாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
நோலன் இயக்குநர் இயக்கத்தில் கடைசியாக முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்கள் சொதப்பிய நிலையில், அவரை ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்தே ஓரம் கட்டி விட்டனர். இந்நிலையில், அவருக்கு ஆதரவு தரப் போகிறேன் என தமாஸ் நடிகர் முடிவு செய்திருப்பது சரியா தவறா என ஒரு பக்கம் அந்த டீமுக்கு உள்ளே விவாதங்கள் நடைபெற்று வந்தாலும், நடிகர் தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் படத்தை ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்.

ஆரம்பத்தில் உதவி: தமாஸ் நடிகர் சினிமாவில் முன்னேறுவதற்காக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நிலையில், தனது கதையை கொடுத்து உதவி செய்தவர் அந்த நோலன் இயக்குநர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த இயக்குநர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க முடிவு செய்து வாக்கும் கொடுத்துவிட்டார். அந்தப் படத்தை தான் தற்போது ஆரம்பித்து இருப்பதாக கூறுகின்றனர்.
கம்பேக் கொடுப்பாரா?: மாஸ் நடிகர், டாப் நடிகர் எதுனா பல முன்னணி நடிகர்களை வைத்து தரமான படங்களை கொடுத்து வந்த நோலன் இயக்குநர் அதன் பின்னர் உச்ச நடிகரை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் மொத்தமாக சொதப்பி விட்டார். அந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், மாஸ் நடிகர் நம்பி கொடுத்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாது இயக்குநருக்கு பெரிய பிரச்சனையை சினிமா வட்டாரத்தில் எழுப்பியது. இந்நிலையில், மீண்டும் கிடைத்துள்ள வாய்ப்பை அந்த இயக்குநர் வீணடிப்பாரா? அல்லது முரட்டுக் கம்பேக் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஓவர் சீன் போட்ட நடிகை: 'மி' எழுத்து நடிகையை தான் முதலில் தமாஸ் நடிகருக்கு ஜோடியாக அந்த இயக்குநர் பார்த்து வைத்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக தனக்கு பாலிவுட்டில் பெரிய டிமாண்ட் உள்ளது என்றும் 4 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தால் நடிக்க வரேன் என ஓவர் சீன் போட்டிருக்கிறார்.
கழட்டி விட்ட ஹீரோ: 4 கோடி எல்லாம் அந்த ஹீரோயினுக்கு ஓவர் முதலில் 2 கோடி தானே கேட்டார். இப்போ என்ன திடீரென சம்பளத்தை அதிகரிக்கிறார் என நினைத்த தமாஸ் நடிகர் அதிரடியாக அந்த நடிகையை கழட்டி விட்டு வெறும் 50 லட்சத்துக்கு ஒரு ஹீரோயினை தனது படத்தில் ஜோடியாக கமிட் செய்து விட்டார் எனக் கூறுகின்றனர்.
அப்போதான் அப்படி: ஆரம்பத்தில் தமாஸ் நடிகர் தனது படங்களில் கதையே இல்லை என்றாலும் நம்பர் நடிகை போன்ற டாப் நடிகைகள் இருந்தே ஆக வேண்டும் என அடம்பிடித்து முன்னணி நடிகைகளை ஹீரோயின்களாக போட்டு வந்தார். ஆனால், தற்போது தனக்கான மார்க்கெட் என்ன என்பதை புரிந்துக் கொண்ட நடிகர் எதில் எல்லாம் சிக்கனம் செய்யலாம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











