அந்த நடிகையையே விட்டு வைக்கலயாம்.. இயக்குநர் பற்றி தெரிந்ததும் கம்பி நீட்டிய நம்பர் நடிகை?
சென்னை: பிரபல நடிகருடன் நம்பர் நடிகை இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீரென அந்த படத்தில் இருந்து நம்பர் நடிகை வெளியேற காரணமே படத்தின் இயக்குநர் தான் என அதிர்ச்சி பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
நம்பர் நடிகை வெளி ஊர்களில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், கோலிவுட்டில் அவர் போடும் ஓவர் சீன் மற்றும் அதிக சம்பளம் காரணமாக யாருமே கிட்ட சேர்க்காமல் இளம் நடிகைகளை புக் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பேய் பட நடிகருடன் இணைந்து நடிக்கலாம் என நடிகை திட்டம் போட்டு ஜோடி சேர முடிவு செய்திருந்தாராம். ஆனால், கடைசியில் நண்பர் ஒருவர் இயக்குநர் குறித்து ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த நிலையில் தான் நடிகை எஜெக்ட் ஆகி விட்டதாக ஷாக்கை கிளப்புகின்றனர்.
மோசமான படம்: அந்த இயக்குநர் தனது வாழ்க்கையிலேயே பண்ண பெரிய தப்பே மில்க் நடிகையை வைத்து படு மோசமாக அப்படியொரு படத்தை எடுத்தது தான் என்கின்றனர். அதன் பின்னர் தான் அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு ஜால்ரா தட்டி வருகிறார் என்றும் அப்படி இருந்தும் அவரை நம்பி படம் கொடுத்த காமெடி நடிகரை காவடி எடுக்க வைத்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.
நம்பர் நடிகை ஜோடி: அந்த பேய் நடிகருக்கு நம்பர் நடிகையை ஜோடியாக்கி செம படத்தை எடுக்கப் போகிறேன் என அந்த இயக்குநர் கெத்துக் காட்டி வந்த நிலையில், படத்தின் கதை, அந்த பேய் நடிகருடன் பேர் என எல்லாமே நடிகைக்கு ஓகே ஆன நிலையில், ஓகேவும் சொல்லி விட்டாராம்.
சுதாரித்த நடிகை: ஆனால், திடீரென அந்த இயக்குநர் குறித்து சில விஷயங்களை நடிகையின் நெருங்கிய நண்பர் ஒருவர் போட்டுக் கொடுக்க சுதாரித்துக் கொண்ட நடிகை இப்போதைக்கு கால்ஷீட் இல்லை கொஞ்சம் பிசி நீங்க வேற ஆளை பார்த்துக்கோங்க என நைஸாக கழண்டு கொண்டதாக கூறுகின்றனர். ஏற்கனவே அந்த இயக்குநர் இயக்கத்தில் அப்படி நடித்த மில்க் நடிகையின் கரியரே காலியானதால் தேவையில்லாமல் தலை கொடுக்க வேண்டாம் என எச்சரித்த நிலையில் தான் நம்பர் நடிகை கும்பிடு போட்டு கிளம்பி விட்டதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











